முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ரூ. 5 லட்சத்துக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இவ்வளவு பெரிய சண்டையா?

ரூ. 5 லட்சத்துக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இவ்வளவு பெரிய சண்டையா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்றைய எபிசோடில், தனம் அண்ணியும், முல்லையும் டாக்டரை போய் பார்த்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் ஆஸ்பிட்டல் செலவுக்கு ரூ. 5 லட்சம் செலவானதை பற்றி மீனா கோபத்தில் பேச, அதை கதிர் கேட்டு வருத்தப்படுகிறார்.

குடும்ப பாங்கான சீரியல்களை மக்கள் எப்போதும் விரும்பி பார்ப்பார்கள். இந்த ஒன்லைனை வைத்து தான் இன்று ஒட்டு மொத்த சின்னத்திரை சீரியல்களும் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது..இந்த வகையான சீரியல்களில்  டாப் இடத்தில் ஏராளமான விஜய் டிவி சீரியல்கள் உள்ளன. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பலர் விரும்பி பார்ப்பார்கள். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது.இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இது இருந்து வருகிறது.

ஒரே வாரத்தில் 2வது முறை.. திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்!

இந்த சீரியலில் கடந்த 1 மாதக்காலமாக முல்லை - கதிர் குழந்தை பிரச்சனை பற்றிய எபிசோடு தான் ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் ரசிகர்கள் இதை சுவாரசியமாக பார்த்தாலும், தொடர்ந்து முல்லை - கதிர் அன்பு சிலரை வெறுக்க வைத்துவிட்டது. இதனால் இந்த சீரியல்  கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் சறுக்கலை சந்தித்து இருந்தது. இதை சரி செய்ய நினைத்த இயக்குனர், இந்த வார இறுதியில் ட்விஸ்ட் வைத்தார். அதாவது, முல்லைக்கு குழந்தை பிறக்க எடுக்கும் ட்ரீமெண்ட் தோல்வி ஆகிவிட்டது.

நேற்றைய எபிசோடில், தனம் அண்ணியும், முல்லையும் டாக்டரை போய் பார்த்தனர். டாக்டர்  முதல் முயற்சி என்பதால் ஃபைலர் ஆகி விட்டது என்கிறார். இதை தாங்க முடியாமல் முல்லை கதறி துடிக்கிறார். இந்த சிகிச்சைக்காக 5 லட்சம் வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செலவு செய்து இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் முல்லையை வீட்டில் இருக்கும் அனைவரும் பேசி சமாதானம் செய்கின்றனர்.

ஆனால் அவர் தொடர்ந்து அழுதுக் கொண்டே இருப்பாதால், அவரிடம் கண்ணன், கயல் பாப்பா, பாண்டியனை கொடுத்து சமாதானம் செய்கிறார். பின்பு முல்லை தன்னுடைய ரூமூக்குள் போய் விடுகிறார். அந்த நேரத்தில் ஜீவா மீண்டும் ட்ரீமெண்ட் பற்றி பேச, மீனாவுக்கு கோபம் வருகிறது.

saani kaayidham review : வாழ்க்கையை சிதைத்தவர்களை பழிவாங்கும் இருவர்!

ஏற்கெனவே 5 லட்ம் கடன் வாங்கி செலவு செய்து விட்டாச்சு, இனிமேல் எல்லாம் கடன் வாங்க முடியாது என சொல்ல, அதற்கு ஐஸ்வர்யாவும் சப்போர்ட் செய்கிறார். இதை கதிர் கேட்டு விடுகிறார். அவரின் முகமே மாறிவிடுகிறது. ஆனால் மூர்த்தியும் தனமும் பணமெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்கின்றனர். இந்நிலையில் முல்லை குழந்தை பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? என்பது ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv