Home /News /entertainment /

கதிரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் பிரச்சனை!

கதிரால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் பிரச்சனை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் வரும் வாரத்தில் இந்த சம்பவத்தை வைத்து வீட்டில் மிகப் பெரிய சண்டை நிகழ உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கெனவே நடந்த சண்டையால் இப்போது கதிரும் - முல்லையும் தனியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இப்போது கதிருக்கு தெரியாமல் வீடு விற்பதில் மற்றொரு பிரச்சனை வெடிக்கிறது.

    பாசமான அண்ணன் - தம்பிகளின் கதையை கண்முன் நிறுத்தும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கூடிய விரைவில் 1000 எபிசோடுகளை நெருங்க உள்ளது. இத்தனை வருடமாக ஏகப்பட்ட ட்விஸ்ட், விறுவிறுப்பு குறையாத திரைக்கதையுடன் பயணித்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றும் மக்களின் ஃபேவரெட் சீரியல் லிஸ்டில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் - நடிகைகளின் கதாபாத்திரங்கள் தான்.  கதைப்படி சில மாதங்களுக்கு முன்பு நடந்த மிகப் பொரிய சண்டையில் கதிர் வீட்டை விட்டு சென்று விட்டார்.

    அந்த நிகழ்ச்சிக்கு செல்ல தான் சீரியலில் இருந்து விலகினாரா அர்ச்சனா?

    ஆரம்பத்தில் ஹோட்டலில் வேலை செய்து வந்தவர், இப்போது சொந்தமாக பாண்டியன் மெஸ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதை சுற்றியே சீரியல் கதை நகர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லை மூர்த்தி பூர்வீக வீட்டை விற்கவும் முடிவு எடுக்கிறார். வீட்டை விற்று அந்த பணத்தில் வேற இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி செல்லலாம் என நினைக்கிறார். இந்த விஷயம் இன்னும் கதிருக்கு தெரியாது. யாரும் இதைப்பற்றி கதிரிடம் பேசவில்லை.

    லவ் யூ குட்டு.. லவ்வரை அறிமுகம் செய்த விஜய் டிவி சீரியல் நடிகை!

    இன்றைய எபிசோடில் இதுப்பறி கதிரிடம் சொல்கிறான் கடைக்குட்டி தம்பி கண்ணன். கதிருக்கு அதிர்ச்சி தாங்க. அந்த நேரம் பார்த்து கடையில் முல்லையின் அம்மாவும் இருக்கிறார். உடனே அவர், பிரச்சனையை பெரிதாக்குகிறார். கதிருக்கும் சொத்தில் பங்கு இருக்கிறது, யாரும் அவருக்கு தெரியாமல் விற்க முடியாது இந்த விஷயத்தை நான் சும்மா விடமாட்டேன் என்கிறார். ஆனால் மூர்த்தி வீட்டில்,  எல்லோரும் கதிரிடம் நிலத்தை காட்ட வேண்டும் என பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வரும் வாரத்தில் இந்த சம்பவத்தை வைத்து வீட்டில் மிகப் பெரிய சண்டை நிகழ உள்ளது.

    அதாவது முல்லையின் அம்மா, நேராக மூர்த்தி வீட்டுக்குச் சென்று இதுப்பற்றி பேசி சண்டை போடுகிறார். அதுமட்டுமில்லை கதிருக்கு தெரியாமல் வீட்டை விற்க விடமாட்டேன் என கத்துகிறார். இதனால் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில்  சண்டை வெடிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி