ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாண்டியன் ஸ்டோர்ஸில் வீட்டை விட்டு போன முல்லை - கதிர்.. மீனாவை ஓங்கி அறைந்த ஜீவா!

பாண்டியன் ஸ்டோர்ஸில் வீட்டை விட்டு போன முல்லை - கதிர்.. மீனாவை ஓங்கி அறைந்த ஜீவா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்போது சேரும்?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் கதிரும் - முல்லையும் வீட்டை விட்டு போன கோபத்தில் மீனாவை ஓங்கி அறைய செல்கிறார் ஜீவா. கூட்டு குடும்பமாக ஒற்றுமையாக இருந்த மூர்த்தி குடும்பத்தில்  இப்போது சண்டை வெடிக்கிறது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் இதுவரை இவ்வளவு பெரிய பிரச்சனை வெடித்தது இல்லை. என்ன நடந்தாலும் அண்ணன் - தம்பிகள் நால்வரும் ஒன்றாக சேர்ந்து பிரச்சனையை சந்திப்பார்கள். ஆனால் இன்று கதிர் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மூர்த்தி தனத்தால் வெளியில் வர முடியவில்லை. ஒற்றுமையால் தூண் போல் நின்ற குடும்பத்தை வெறும் ரூ. 50,000 பணம் பிரிந்து விட்டது. இதற்கு மேலும் அண்ணனுக்கு கஷ்டத்தை தர வேண்டாம் என நினைத்த கதிர், மொத்தமாக வீட்டை விட்டு செல்கிறார்.

  பாரதிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி! கண்ணம்மாவை பற்றி கேட்கும் ஹேமா!

  இன்றைய எபிசோடில் அதை நினைத்து தனம், ஜீவா, மூர்த்தி ஆகியோர் கதறி கதறி அழுகின்றனர். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் மீனா அப்பா தான் என சண்டை போடுகிறார் ஜீவா. அப்பாவுக்கு சப்போர்ட் செய்து மீனா பேச, கோபத்தில் மீனாவை அடிக்க போகிறார் ஜீவா. அதற்குள் மீனாவின் அப்பா ஜனார்த்தன் உள்ளே புகுந்து ஜீவாவிடம் மல்லுக்கட்டுகிறார். மீனா மேல் ஒரு அடி விழுந்தாலும் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். முல்லையின் அப்பா, அம்மாவும் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

  கேக் வெட்டி கொண்டாடிய காற்றுக்கென்ன வேலி சூர்யா - வெண்ணிலா! எதற்காக தெரியுமா?

  தனத்தின் அம்மாவும் அண்ணனும் தனத்தை பயங்கரமாக  திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். கண்ணன் ஒருபக்கம் கதிர் முல்லையை தேடி ஓடுகிறார். ஒற்றுமையுடன் இருந்த குடும்பத்தை பணத்தால் வந்த சண்டை பிரித்து விடுகிறது. மூர்த்தி இடி விழுந்தது போல் நிற்கிறார். ஆனால் இந்த முறை அவரை தாங்கி பிடிக்க கதிர் இல்லை. முல்லையுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு சென்ற கதிர், நடு ரோட்டில் நிற்கிறார். முல்லைக்கு ஆறுதல் சொல்லி தேற்றுகிறார். அடுத்து இருவரும் எங்கே செல்வார்கள்? பிரிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்போது சேரும்? போன்ற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகள் பதில் சொல்லும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv