Home /News /entertainment /

தம்பிகளுக்கு வில்லனாகும் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சனை!

தம்பிகளுக்கு வில்லனாகும் மூர்த்தி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பிரச்சனை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டைக்கு போகிறார். அதற்கு காரணமும் இருக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியிடம் குடித்துவிட்டு சண்டைக்கு போகிறார் ஜீவா. மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்க, இதற்கெல்லாம் காரணம் யாரென்றால் அதற்கு பின்னால் மீனா அப்பா ஜனார்தன் நிற்கிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரத்திற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அரங்கேறாத பிரச்சனை அண்ணன் - தம்பிகள் சண்டை தான். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அண்ணன் தம்பிகள் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எந்த பிரச்சனை வந்தாலும் சேர்ந்து நின்று தான் சமாளிப்பார்கள். இப்படி இருக்கையில், மூத்த அண்ணன் இருக்கும் போது சத்தமாக கூட பேச பயப்படும் ஜீவா, மூர்த்தியிடம் சண்டைக்கு போகிறார். அதற்கு காரணமும் இருக்கிறது.

    மீனாவின் அப்பா ஜனார்தனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிடிக்காது. மாப்பிளை ஜீவாவை ஏற்றுக் கொண்ட அவர், அவரின் குடும்பத்தை ஏற்க மறுக்கிறார். இப்படி இருக்கையில், ஜீவாவை எப்படியவது வீட்டோட மாப்பிள்ளை ஆக்கிவிட வேண்டும் என நினைக்கிறார். அதற்காக அவர் பல திட்டங்களை போட்டுள்ளார். புது கடை திறப்பு தொடங்கி, எல்லா விஷயத்திலும் ஜனார்தன் சொல்லும் ஒரே ஒரு விஷயம் இதுதான். ஜீவாவும் - மீனாவும் தனியாக வந்துவிட வேண்டும் . இப்படி இருக்கையில் சமீபத்தில் அவருக்கு இதய பிரச்சனை வர, அவருக்கு உதவியாக ஜீவா அவருடனே தங்கும்படி ஆகிவிட்டது.

    குக் வித் கோமாளிகளுடன் போட்டி போட ரக்‌ஷன் செய்த காரியம்.. செம்ம வைரல் போங்க!

    அவருக்கு ஜீவா உதவியாக இருப்பார் என வாக்கு கொடுத்ததே மூர்த்தி தான். இதனால் ஜீவா முழு நேரமும் ஜனார்தனின் சூப்பர் மார்க்கெட்டில் இருப்பது போல் ஆகிவிட்டது. இப்படி இருக்கையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் அவரின் வேலைகள் அனைத்தையும் ஐஸ்வர்யா பார்த்துக் கொள்கிறார். ஜீவா கடைக்கு வந்தாலும், மூர்த்தி அவரை ஜனார்தன் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். இதனால் ஜீவாவுக்கு மொத்த குடும்பமும் அவரை ஒதுக்குவது போல் எண்ணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் தான், மீனாவின் அப்பா இன்றைய எபிசோடில் ஜீவாவிடம் வீட்டோட மாப்பிளையாக வரும்படி கூறுகிறார்.

    சிம்புவை பற்றி சின்னத்திரை பிரபலத்தின் ஷாக்கிங் ஸ்டேட்மெண்ட்!

    இந்த மொத்த கோபத்தையும் ஜீவா, மூர்த்தி அண்ணனிடம் காட்டுகிறார். குடித்துவிட்டு வீட்டுக்கு போகும் ஜீவா, மூர்த்தியிடம் தனது மனதில் இருக்கும் அனைத்தும் பிரச்சனைகளையும் போட்டு உடைக்கிறார். மொத்த குடும்பமும் ஷாக்கில் நிற்கின்றனர். இதுக் குறித்த புரமோ இன்றைய எபிசோடின் இறுதியில் ஒளீப்பரப்பாகியுள்ளது. அடுத்த வாரம் இந்த எபிசோடை பார்க்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி