பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திடீர் மாற்றம்... இனி ஐஸ்வர்யாவாக இவர் தான் நடிக்க உள்ளார்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

தங்க இடம் இல்லாமல் தவித்த நிலையில் தற்போது ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

 • Share this:
  பிரபல முன்னணி சேனல்கள் அனைத்திலுமே சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் பல சீரியல்கள் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  அதில் முக்கியமான ஹிட் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ஹிட் சீரியல்களின் பட்டியலில் ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய மூன்றும் ரசிகர்கள் தவறாமல் பார்க்கும் சீரியல்களாக இருந்து வருகின்றன.விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் சமீப மாதங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்து வருகிறது. அந்த அளவிற்கு திரைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதனை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

  அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மறைந்த பிரபல விஜே சித்ரா இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். முன்பே இந்த சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட, சித்ராவின் மரணத்திற்கு பிறகு இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. வலுவான கதையம்சம் மற்றும் அதிகரித்த ரசிகர் எண்ணிக்கை காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கில் சில காலம் முதலிடம் பிடித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காட்டப்படும் குடும்பத்தின் மிக இளையவனான கண்ணன், தனது சொந்தகார மற்றும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுமான ஐஸ்வர்யாவை குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் கூட்டிச்சென்று கோவிலில் திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கண்ணன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்வதால் அவனது மூன்று அண்ணன்களும் அவனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர். இதனால் கண்ணன், ஐஸ்வர்யாவை கூட்டி கொண்டு தங்க இடம் இல்லாமல் தவித்த நிலையில் தற்போது ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர்.

  நடிகை சாய் காயத்ரி


  என்ன தான் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றினாலும் அவன் கஷ்டப்படுவதை பார்க்க முடியாத அவனது அண்ணன்கள், கண்ணனுக்கு தெரியாமல் அவனுக்கு மளிகை பொருட்கள் அனுப்புவது, பணம் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி கண்ணன்-ஐஸ்வர்யா இருவரும் எப்படி திருமணத்திற்கு பிறகு வாழுகிறார்கள் என்ற கதை கடந்த சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யா வேடத்தில் நடிப்பவர் மாற்றம் செய்யப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இனி ஐஸ்வர்யாவாக ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: