பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான புரமோ வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் ஐஸ்வர்யாவால் எது எதுக்கோ பிரச்சனை வரும் என எதிர்பார்த்த நிலையில் இப்போது நைட்டி பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளது. ஃபேமலி சப்ஜெட் என்பதால் அதிக தரப்பினரால் விரும்பப்படும் சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளது. 3 வருடங்களை கடந்து தொடர்ந்து முதலிடத்தில் சீரியல் பயணித்து கொண்டிருக்கிறது. எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு போட்டியாக பார்க்கப்படுவது பாரதி கண்ணம்மா சீரியல் தான். ஆனால் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் தோய்வை சந்திருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு சீரியலில் அம்மாவாக நடித்த லட்சுமி அம்மா ரோல் இறப்பது போல் கதை பயணித்தது. அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் தற்போது விஜய் சீரியல்களில் முதல் ரேங்கில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். கதைப்படி தற்போது கண்ணன் - ஐஸ்வர்யாவை மூர்த்தி மீண்டும் வீட்டுக்குள் சேர்த்து கொண்டார்.
இதையும் படிங்க.. பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத சஞ்சீவ்.. காரணமான அக்கா சிந்து இவர் தான்!
வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம், செய்து கொண்ட கண்ணன் - ஐஸ்வர்யாவை மூர்த்தி விட்டை விட்டு வெளியே அனுப்பினார். அவர்கள் இருவரும் எதிர் வீட்டில் தான் குடி இருந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனம், அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஐஸ்வர்யாவின் வருகை மீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் சண்டை நைட்டியால் வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் நைட்டி மற்றும் மாடல் உடைகளை அணிய கூடாது என இறந்து போன லட்சுமி அம்மா சொல்லி இருந்தார். அதை இது வரை 3 மருமகள்களும் ஃபாலோ செய்து வந்தனர்.
இதையும் படிங்க.. சின்னத்திரையில் புயலை கிளப்பிய விஜய் டிவி கல்யாணி மீண்டும் ரீஎன்ட்ரி!
ஆனால் தர்போது புதியதாக வந்துள்ள கடைசி மருமகள் ஐஸ்வர்யா நைட்டி போட, இது பெரிய பிரச்சனை ஆகுகிறது. மீனா, ஐஸ்வர்யாவை பார்த்து பொறாமை படும் அளவுக்கு இந்த நைட்டி பிரச்சனை சென்று விட்டது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pandian Stores, TV Serial, Vijay tv