Home /News /entertainment /

மீனாவால் மீண்டும் அசிங்கப்படும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று!

மீனாவால் மீண்டும் அசிங்கப்படும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

தனம் அண்ணி, மீனா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தூண் என்றே சொல்லலாம்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏகப்பட்ட சண்டைகள் போய் கொண்டிருக்க ,இப்போது மீனாவால் அடுத்த பிரச்சனை வெடிக்கிறது.

    சீரியல் என்றாலே அது குடும்பங்கள் சேர்ந்து பார்ப்பது தான். இங்கு ஒரு குடும்பத்தை வைத்து தான் மொத்த சீரியலுமே என்ற ரேஞ்சில் செல்வது தான் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். தினசரி நம் தமிழ் குடும்பங்களில் என்ன நடக்கிறதோ அது அப்படியே இந்த சீரியலில் டெலிகாஸ்ட் செய்யப்படும். காலையில் எழுவது, வேலைக்கு போவது, இரவு வீடு திரும்புவது, சாப்பிடுவது. இதற்கு இடையில் வீட்டில் இருக்கும் பெண்களால் அவ்வப்போது ஏற்படும் சண்டைகள். ஒரு வாரத்தில் அந்த சண்டை சரி ஆகி மீண்டும் இணைந்து விடுவது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அன்றாடம் ஒளிப்பரப்படும் கதையாக இருக்கிறது. இதை விரும்பி பார்க்கும் சீரியல் கூட்டமும் ஒருபக்கம் இருக்கிறது.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சன் டிவி சீரியல்!

    இந்த குடும்ப கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் வெற்றிக்கு காரணம். சமீபத்தில் பாண்டியன் பிரதர்ஸின் அம்மா, லட்சுமி இறந்த காட்சிகள் ஒளிப்பரப்பான போது, அது நிஜம் என்ற அளவுக்கு நினைத்து கொண்டு அழுத சீரியல் ரசிகர்கள் இங்கு ஏராளம். கிராமப்புறங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிகப் பெரிய அளவில் ரீச் உள்ளது. இந்த சீரியலில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் கதாபாத்திரம் தனம் மற்றும் மீனா.

    இதையும் படிங்க.. நடிகையின் வீட்டிற்குள் திடீரென புகுந்த பாம்பு - ஓட்டம் பிடித்த முதியவர்கள்!

    இவர்கள் இருவரும் இந்த சீரியலின் தூண் என்றே சொல்லலாம். குட்டி அண்ணி மீனா ஏதாவது பிரச்சனையை கொண்டு வர, அதை சரிசெய்வதே தனம் அண்ணியின் வேலை. அந்த வகையில் தற்போது சீரியலில் மீனாவின் குழந்தை கயலுக்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்ச்சி நடக்க போகிறது. மீனாவுக்கு அண்ணன் - தம்பி இல்லாத காரணத்தினால் தனத்தின் அண்ணன், மீனா குழந்தைக்கு சீர் வரிசை கொண்டு வருகிறார்.



    ஆனால் மீனாவின் குடும்பம் அவரை அவமதித்து மீனாவின் அத்தை பையனை வெளிநாட்டில் இருந்து வர வைத்து இருப்பதாக கூறுகிறது. இதனால் தனம் முகம் மாறுகிறது. மீனாவின் அண்ணணுக்கு சபையில் தலைக்குனிவு ஏற்படுகிறது. இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகவுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி