Home /News /entertainment /

தனம் அண்ணியிடம் முல்லை அம்மா கேட்கும் உதவி.. எரிச்சலில் மீனா!

தனம் அண்ணியிடம் முல்லை அம்மா கேட்கும் உதவி.. எரிச்சலில் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையால் இயற்கை முறையில் குழந்தை பெற்று தர முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் குழந்தை பிரச்சனையால் கடைசி வரை நமக்கு ஒரு பாத்ரூம் கிடைக்காது என்ற எரிச்சலில் இருக்கிறார் மீனா. இன்றைய எபிசோடில் நடந்தவை இதோ

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடை திறப்புக்கு பின்பு மொத்த குடும்பமும் பயங்கர சந்தோஷத்தில் இருந்தனர். அடுத்தது வீடு, கார் என திட்டமிட்டார்கள். கூடிய விரைவில் மீனாவின் நீண்ட நாள் கோரிக்கையாக பாத்ரூம் கட்டி தரப்படும் என்றும் மூர்த்தி கூறி இருந்தார். ஆனால் அதற்குள் முல்லை பிரச்சனை பெரிய பிரச்சனையாக வெடித்து விட்டது. அதாவது முல்லையால் இயற்கை முறையில் குழந்தை பெற்று தர முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

    என் பொண்ணுக்கு கல்யாணம் ஆகணும்.. வருத்தப்பட்ட ராஜா ராணி 2 அர்ச்சனா அம்மா!

    இதனால் கவலையில் இருக்கும் முல்லை வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் மொத்த குடும்பமும் அவருக்கு ஆறுதலாக பேசி மீண்டும் முல்லையை அழைத்து வந்தனர். அதுமட்டுமில்லை, இதற்காக வைத்தியமும் எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் தனம், அண்ணி. இப்படி இருக்கையில் இன்று வீட்டுக்கு வரும் முல்லை அம்மா , தனத்திடம் முல்லை ட்ரீமெண்டுக்கு அதிக பணசெலவு ஆகும் என்கிறார்,. உடனே தனம், முல்லைக்கு ஆகும் மொத்த மருத்துவ செலவுக்கும் நான் பொறுப்பேற்கிறேன் என்கிறார். உடனே மீனாவுக்கு எரிச்சல் ஆகுகிறது.



    இதை பற்றி ஜீவாவிடம் மீனா பேசுகிறார். போதாத குறை தற்போது வெளியாகியுள்ள புரமோவில் தனம், முல்லை மற்றும் கதிரை மருத்துமனை அழைத்து செல்கிறார். அங்கு செயற்கை முறையில் கருவுருதல் பற்றி மருத்துவர் சொல்கிறார். இதற்கு அதிக செலவு ஆகும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்,. வீட்டுக்கு வரும், தனம் அண்னி இதைப்பற்றி மூர்த்தியிடம் பேச, உடனே மூர்த்தி இப்போதைக்கு வீடு கட்ட முடியாது என்று தள்ளி வைக்கிறார். வீட்டில் ரூம் இல்லை என கஷ்டப்படும் ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கு இந்த முடிவு அதிர்ச்சியை தருகிறது.

    பழைய சாதத்தை வைத்து சாஃப்டான சப்பாத்தி… இதையும் ஒருமுறை ட்ரை பண்ணுங்க!

    அதிலும் குறிப்பாக மீனாவின் பல நாள் கோரிக்கையான தனி பாத்ரூம்ஆசை  மீண்டும் தள்ளி வைக்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி