• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாவப்பட்ட கண்ணன்.. தனத்தின் குழந்தையை பார்க்க வாசலில் ஏங்கி நிற்கும் கொடுமை!

பாவப்பட்ட கண்ணன்.. தனத்தின் குழந்தையை பார்க்க வாசலில் ஏங்கி நிற்கும் கொடுமை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடைசி வரையிலும் கண்ணனுக்கு குழந்தையை காட்டவில்லை.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்த நபர்களும் தனத்தின் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவில் கண்ணனை கூப்பிடாமல் ஒதுக்கி வைக்கிறார்கள்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தில் தொடங்கி லட்சுமி அம்மாவின் மரணம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பெரியதாக எந்த சுவாரசியமான நகர்வும் இல்லை. தனத்திற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. யாரும் வீட்டில் இல்லாத சமயம் தனத்திற்கு பிரசவ வலி வர, கண்ணன் ஓடி சென்று உதவுகிறான். அவனே தனத்தை தூக்கி ஆஸ்பிட்டலில் சேர்த்து மூர்த்தி, கதிர், ஜீவாவுக்கு ஃபோன் பண்ணி தகவலும் சொல்கிறான். ஆனால் கடைசி வரையிலும் கண்ணனுக்கு குழந்தையை காட்டவில்லை.

    குழந்தையை எப்படியாவது பார்த்து தூக்கிட வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அங்கு ஏமாற்றம் தான். குழந்தை குளிக்கும் போது மறைந்து மறைந்து பார்கிறான். ஆனால் இந்நாள் வரை குழந்தையை தூக்கி கண்ணன், ஆசையாக கொஞ்சவில்லை. இந்நிலையில் இன்றைய எபிசோடில் தனத்தின் குழந்தையை பெயர் வைத்து தொட்டிலில் போடும் விஷேசம் வீட்டில் சிம்பிளாக நடைப்பெற்று வருகிறது. இதில் குடும்ப சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். வீட்டுக்கு எதிரில் இருக்கும் கண்ணனை ஒருவரும் அழைக்கவில்லை. ஏற்கெனவே மீனா கோபத்தில் அங்கும் இங்கும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார். புது தொட்டிலில் குழந்தையை போட்டது மீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கயல் பாப்பாவுக்கு பழைய தொட்டிலில் போட வேண்டும் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பிரச்சனை செய்ததை மீனா இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் பெயர் வைப்பதிலும் பிரச்சனை வெடிக்கிறது. கடைசியில் லட்சுமி அம்மா பெயரை சேர்த்து லட்சுமண பாண்டியன் என பெயர் வைக்கின்றனர்.

    எல்லை மீறும் வார்த்தைகள்.. கட்டுபாடு இல்லாத கோபம்! தாமரைக்கு எண்டு கார்டு இல்லையா?

    எல்லோரும் சந்தோஷமாக இருக்க, கண்ணன் மட்டும் வெளியில் இருந்து கொண்டே பாவமாக எட்டி எட்டி பார்க்கிறான். இதை நோட் பண்ண மீனா, வெளியில் சென்று கண்ணனிடம் பேச்சு கொடுக்கிறார். ஐஸ்வர்யாவும் மீனாவிடம் ஒருமுறை குழந்தையை பார்க்க வேண்டும் என கெஞ்சி கேட்கிறாள். மீனாவுக்கு பாவமாக தெரிகிறது. மனசு கேட்காத மீனா, யாருக்கும் தெரியாமல் தனம் குழந்தையை வெளியில் தூக்கி வந்து கண்ணனுக்கு காட்டுகிறார். கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஆனந்த கண்ணீரில் குழந்தையை தூக்கி கொஞ்சி முத்தமிடுகிறார்கள். இன்றைய எபிசோடும் முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: