ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

முதல் நாள் சண்டை.. அடுத்த நாளே சமாதானம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கற்று தருவது இதுதான்!

முதல் நாள் சண்டை.. அடுத்த நாளே சமாதானம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கற்று தருவது இதுதான்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் அனைத்து சீரியல்களும் டாப் ஹிட்தான். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகப் பெரிய வெற்றியை அடைய காரணமே கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வைத்தே ரசிகர்களுக்கு உரக்க சொல்வது. சின்னத்திரையில் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் அனைத்து சீரியல்களும் டாப் ஹிட்தான். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கியமான இடத்தை பெற்றுள்ளது.

இன்றைய எபிசோடிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மிகப் பெரிய சண்டை வெடிக்கிறது. இதனால் குடும்பமே இரண்டாக பிரிந்து விடும் என நினைத்திருக்கையில் ,அடுத்த சில காட்சிகளிலே அந்த பிரச்சனைக்கான தீர்வைக் காட்டி அந்த சண்டையை முடித்து வைக்கிறார் இயக்குனர். இதை பல குடும்பங்கள் கற்றுக் கொண்டாலே போதும். கூட்டு குடும்பம் பிரிய வாய்ப்பே இல்லை. சரி இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இதையும் படிங்க.. மளிகை கடை.. மாவு கடை.. ஸ்வீட்டு கடை.. விஜய் டிவி சீரியல்களை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

தனம் அண்ணியின் குழந்தையை வைத்து மீனா நேற்று சண்டை போட்டார். மீனாவின் வார்த்தைகள் தனத்தை அழ வைத்தது. இந்த வருத்தத்தில் இருந்தவர், மீனா பேசியது பற்றியே நினைத்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து மூர்த்தி வீட்டுக்கு வந்து தனத்தை ஆஸ்பிட்டல் அழைத்து சென்றார். இதனால் தனம் குழந்தையை முல்லையிடம் கொடுத்து விட்டு சென்றார். தனம் போன கொஞ்ச நேரத்தில் குழந்தை அழ தொடங்குகிறது. இந்த பக்கம் மீனா, கண்ணன் - ஐஸ்வர்யாவிடம் ”இந்த வீட்டில் கயல் பாப்பாவை யாரும் கவனிக்குறது இல்ல. எல்லோருக்கும் தனம் அண்ணியின் குழந்தை பாண்டியன் தான் ஒஸ்தி” என்று பேசி கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க.. 1 கோடி கொடுத்தாங்க.. நீ பார்த்த? ரசிகர்களால் கடுப்பான சர்வைவர் விஜயலட்சுமி! ஏன்?

இதனால் கண்ணன் ஐஸ்வர்யா முகம் மாறுகிறது. உடனே ஐஸ்வர்யா மீனாவை பார்த்து ”தனம் அண்ணிக்கு குழந்தை பிறந்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா?” என மூஞ்சியில் அடிப்பது போல் கேட்டு விடுகிறார். இதனால் மீனா கோபித்து கொண்டு வீட்டுக்குள் போய் விடுகிறார். அப்போது பாண்டியன் நிறுத்தாமல் அழ, மீனா கோபத்தை எல்லாம் மறந்து குழந்தையை தூக்கி சமாதானம் செய்கிறார். ஒரு படி மேலே போய் குழந்தைக்கு தாய் பாலும் கொடுக்கிறார்.

அதற்குள் தனம் வீட்டுக்கு ஓடி வர, மீனா குழந்தையை சமாதானம் செய்து பால் கொடுப்பதை பார்த்து திகைத்து நிற்கிறார். மீனாவின் குணத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என நினைத்து சந்தோஷப்படுகிறார். இதை பற்றி மூர்த்தியிடமும் சொல்லி ஆனந்த கண்ணீர் விடுகிறார். அடுத்தது, மதியம் ஐஸ்வர்யாவிடம் சண்டை போட்ட மீனா, இரவு அவரே போய் பேசி ஐஸ்வர்யாவுடன் சமாதானம் ஆகிறார். காலையில் வீடே இரண்டாகும் அளவுக்கு சண்டை வெடிக்க இரவு சாப்பிடுவதற்குள் அந்த சண்டைகள் முடிந்து விடுகிறார். இதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நாம் கற்று கொள்ளும் கூட்டு குடும்ப ஒற்றுமை. இந்த ஒன்லைன் தான் இந்த சீரியலின் வெற்றியும் கூட.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv