Pandian Stores: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகருக்கு விருது - மனைவியின் உருக்கமான பதிவு

padian stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட் ரெங்கநாதனுக்கு விஜய் டிவியில் விருது கிடைத்திருப்பது அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டுக்குடும்ப வாழ்க்கை, அண்ணன் தம்பி பாசம் ஆகியவற்றை மையப்படுத்தி இத்தொடரின் கதை அமைக்கப்பட்டிருப்பதால் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மூர்த்தியின் முதல் தம்பி ஜீவா கேரக்டரில் நடித்திருப்பவர் வெங்கட் ரெங்கநாதன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் தவிர சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ தொடரிலும் வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இவருக்கு நடிகர் விஜய் வீட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விரும்பிப் பார்க்கும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா தான் அதற்கு காரணம் என்று கூறியிருந்த வெங்கட் விரைவில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த 6-வது விஜய் டிவி விருது விழாவில் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் வெங்கட் ரெங்கநாதன் பெற்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விருது விழாவுக்கு செல்லமுடியாத அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் தொலைக்காட்சியில் வெங்கட் விருது வாங்குவதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் வெங்கட்டின் மனைவி அஜூ.

அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது, “இன்பமும் துன்பமும் மிக சரியான நிலையில். இன்பம் - திறமைக்கு அங்கீகாரம், துன்பம்- அதை காண இயலாதது. கொரொனா அச்சுறுத்தல் காரணமாக வெங்கட் உடன் நாங்கள் இந்த தருணத்தில் இருக்கமுடியவில்லை. நாங்கள் அவருடன் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பார்.



வெங்கட் விருது வாங்கும் போது அவருடன் நடிக்கும் ஹேமாராஜ் உற்சாகமாக கைதட்டி பாராட்டியுள்ளார். அவரது மகிழ்ச்சியைப் பார்க்கும் போது வெங்கட்டுக்கு ஒரு நண்பராக எவ்வளவு ஆதரவாக இருந்திருப்பார் என்பதை உணரமுடிகிறது. அவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: