முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆட்டி வைக்கும் ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆட்டி வைக்கும் ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது.

  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தால் மீண்டும் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. வழக்கம் போல் இல்லாமல் ஐஸ்வர்யாவின் அதிரடி ஆட்டத்தால் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஆடி போயியுள்ளது. அதுமட்டுமில்லை, முல்லை, மீனா ஆகியோருக்கு ஐஸ்வர்யாவை கண்டாலே பிடிக்காமல் போக, தினம் தினம் வீட்டில் சண்டை வெடிக்கிறது.

கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது. வீட்டுக்கு தெரியாமல் கண்ணன், ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்ய, இந்த அதிர்ச்சி தாங்காமல் லட்சுமி அம்மா இறந்து போக சீரியலின் கதையோட்டம் ஜெட் வேகத்தில் பறந்தது. அதன் பின்பு, மூர்த்தி கண்ணனை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்தார். அவர்கள் மீது கட்டுக்கடுங்காத கோபத்தில் இருந்தார். இந்த நேரத்தில் தான் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மூர்த்தியின் எதிர் வீட்டுக்கே குடி வந்தனர்.

இதையும் படிங்க.. சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!

இதனால் தினம் தினம், கண்ணணை பார்க்கும் சூழ்நிலைக்கு மூர்த்தி தள்ளப்பட்டார். அவரின் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. இந்த நேரத்தில் தான் மீனாவின் அப்பா கடையில் ஏற்பட்ட பிரச்சனையால், கண்ணனை ரவுடிகள் அடித்து விடுகின்றனர். இதனால் மீண்டும் கண்ணனை வீட்டுக்குள் சேர்த்து கொள்ளும் நிலை வர, மூத்த அண்னி தனம், பிடிவாதமாக இருந்து கண்ணன் - ஐஸ்வர்யாவை மீண்டும் வீட்டுக்கு அழைத்து கொண்டார். இப்போது எல்லோரும் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் இருக்கின்றனர். ஆரம்பத்தில் நல்லா தான் போச்சு, ஆனால் இப்போது முல்லை மற்றும் மீனாவுக்கு ஐஸ்வர்யாவை பார்த்தாலே பிடிக்காதது போல் ஆகி விட்டது.

இதையும் படிங்க.. கலர்ஸ் தமிழ் வள்ளி திருமணம் சீரியல் எப்படி இருக்கும்? நடிகர்கள் நக்ஷத்ரா, ஷியாம் ஷேரிங்க்ஸ்!

அதற்கு முக்கியமான காரணம்,ஐஸ்வர்யாவின் துடுக்கான பேச்சு தான். ஆரம்பத்திலே பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் கணித்து இருந்தனர். ஐஸ்வர்யா தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு வந்த வில்லி என்று, அது உண்மை என்பது போலவே தற்போது சீரியலின் கதைக்களம் உள்ளது. ஐஸ்வர்யா செய்யும் செயலால் தினம் தினம் புது பிரச்சனை வருகிறது. முல்லையும் மீனாவும் ஐஸ்வர்யாவுடன் சண்டை போடுகின்றனர். இவை எல்லாவற்றையும் தனம் அண்ணி சரி செய்து வருகிறார்.

இப்போது பொங்கல் பண்டிகையை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தயாரகி விட்டனர். இதிலும் பிரச்சனை தான். சொல்லப்போனால் மொத்த குடும்பமும் ஐஸ்வர்யாவுடன் மல்லுக்கட்ட முடியாமல் அமைதியாக செல்கின்றனர்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv