பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணனுக்காக ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்று சேருகிறது. இது அப்படியே தொடருமா? கண்ணன் செய்த தவறை மன்னித்து மூர்த்தி மீண்டும் ஏற்று கொள்வாரா? என்பதற்கு வரும் எபிசோடுகள் பதில் சொல்ல உள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு நடிகர், நடிகைகளும் முக்கிய காரணம் எனலாம். விஜய் டிவியில் ராப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கும் முக்கியமான சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸூம் ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி அம்மா இறந்தது போல ஒளிபரப்பான எபிசோடுகளால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்றது.
இதையடுத்து சீரியலின் கதைக்களம் டாப் கியரில் சென்றது. கண்ணன் - ஐஸ்வர்யா டிராக்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கண்ணன் மீண்டும் அண்ணன்களுடன் பேசுவது போல் கதை சென்று கொண்டிருக்கிறது. மீனா அப்பாவின் கடையில் கண்ணன் திருடி விட்டதாக எழுந்த பிரச்சனையை குட்டி அண்ணி மீனா தீர்த்து வைத்தார். உண்மையில் கடையில் பணத்தை திருடிய விஜயகுமாரை மீனாவின் அப்பா கடையை விட்டு வெளியே அனுப்பினார்.
அந்த நேரம் பார்த்து கதிர், விஜயகுமாரை ரோட்டில் வைத்து அடிக்க, அவர் கோபத்தை கரம் வைத்து கண்ணனிடம் காட்டினார். இரவு நேரம் தனியாக வந்து கொண்டிருந்த கண்ணனை, அடியாட்கள் வைத்து அடித்து விடுகிறார். மூச்சு பேச்சு இல்லாமல் கண்ணன் ரோட்டில் மயங்கி கிடக்கிறார். நேற்று இந்த எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கவிருப்பதை பார்க்கலாம்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வீட்டுக்கு வராததால் ஐஸ்வர்யா வாசலில் நின்று கொண்டு கண்ணனை தேடுகிறார். அந்த நேரம் பார்த்து ஜீவா வர, வழக்கம் போல் பேச்சு கொடுக்கிறார். வீட்டுக்கு உள்ளே போகும் ஜீவா, தனம் அண்ணி அவரின் அம்மா வீட்டுக்கு போன தகவலை தெரிந்து சோகம் ஆகிறார். அண்ணி இல்லாத வீடு, வீடே இல்லை என வழக்கம் போல் செண்டிமெண்டாக பேச, மீனாவுக்கு கோபம் வருகிறது. இந்த நேரத்தில் தான் ஐஸ்வர்யா அழுதுக் கொண்டே மூர்த்தியின் வீட்டு கதவை தட்டுகி்றார்.
அனைவரும் பயந்தப்படி போய் கதவை திறக்கின்றனர். ஐஸ்வர்யா அழுது கொண்டே கண்ணனை காணவில்லை என்கிறார். ஐஸ்வர்யாவின் அழுகையை பார்த்து மூர்த்தியே அமைதி ஆகிவிடுகிறார். ஜீவாவும், கதிரும் கண்ணனின் நண்பர்களுக்கு கால் செய்து விசாரிக்கின்றனர். ஆனால் எல்லோருமே கண்ணன் வீட்டுக்கு கிளம்பிவிட்டதாக கூறுகின்றனர்.
2021-ல் இந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்!
இதனால் மொத்த குடும்பத்துக்கும் பயம் அதிகமாக, உடனே ஜீவாவும், கதிரும் கண்ணனை தேடி வண்டி எடுத்துக் கொண்டு கிளம்புகின்றனர். அப்போது தான் கண்ணன் ரோட்டில் அடிபட்டு கிடப்பதை பார்த்து பதறி அழுகின்றனர். உடனே கண்ணனை பைக்கில் ஆஸ்பிட்டலுக்கு தூக்கி செல்கின்றனர். இதோடு எபிசோடு முடிகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv