Home /News /entertainment /

எத்தனை நாள் தான் அமைதியா போறது... பாண்டியன் ஸ்டோர்ஸில் மொத்த உண்மையும் போட்டுடைத்த கண்ணன் - ஐஸ்வர்யா!

எத்தனை நாள் தான் அமைதியா போறது... பாண்டியன் ஸ்டோர்ஸில் மொத்த உண்மையும் போட்டுடைத்த கண்ணன் - ஐஸ்வர்யா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முல்லை கோபத்தை அப்படியே கொண்டு போய் ஐஸ்வர்யா - கண்ணன் மீது காட்டுகிறார்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் இவ்வளவு நாளாக பொறுமை காத்த ஐஸர்யாவும் கண்ணனும் மொத்த உண்மையும் போட்டு உடைகிறார்கள்.

    ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சிரியலாக இருந்து வருகிறது. மளிகை கடை வைத்திருக்கும் 4 அண்ணன் - தம்பிகள் அவர்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த தொடரின் ஒன்லைன் ஸ்டோரி. கூட்டு குடும்பமாக வாழும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் பிரச்சனைகள், அதை எப்படி சரி செய்து மீண்டும் குடும்பம் ஒன்றாகிறது என தினமும் தினமும் வெவ்வேறு பாணியில் சீரியல் ஒளிப்பரப்பாகும். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்க போகிறது? என்பதை இப்போது பார்க்கலாம்.

    கதைப்படி கதிர், பணத்தை தொலைத்து விட்டதால் மூத்த அண்ணன் மூர்த்தி , கதிர் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். அந்த கோபத்தால் கதிர் மனசு கஷ்டப்படும் அளவுக்கு ஒரு முடிவை எடுக்கிறார். அதாவது கடை பணத்தை இனிமேல் ஜீவாவே பார்த்து கொள்ளட்டும் என்கிறார். இதனால் கதிர் மனம் உடைந்து போகிறது. அதுமட்டுமில்லை, கதிர் கஷ்டப்படுவதை பார்த்து முல்லையும் கோபம் ஆகிறார்.

    இந்த கோபத்தை அப்படியே கொண்டு போய் ஐஸ்வர்யா - கண்ணன் மீது காட்டுகிறார். பயங்கர கோபத்தில் இருந்த முல்லை, கண்ணன் பிரச்சனையை சரிசெய்ய கதிர் பணத்தை கொடுத்து உதவியது, இதனால் கதிர், மூர்த்தியிடம் திட்டு வாங்கியது என எல்லாவறையும் சொல்லி இனிமே உங்கள் உறவே வேண்டாம் என்கிறார். முல்லையின் கோபத்தில் நியாயம் இருப்பதாக உணர்ந்த கண்ணன் - ஐஸ்வர்யாவும் ஒருவார்த்தை பேசாமல் அமைதியாக நிற்கின்றனர். ஆனால் கண்ணனுக்கு முல்லை மீது வருத்தம் இருந்தது. இந்த நேரத்தில் தான் எப்படியாவது பணத்தை திரும்பி கதிரிடமே தந்து விடவேண்டும் என கண்ணன் நினைக்கிறார்.

    இந்த நேரம் பார்த்து கஸ்தூரி அத்தாச்சி கொளுத்தி போட வர, ஐஸ்வர்யா அவரிடம் பண உதவி கேட்கிறார். எதற்கு இவ்வளவு பணம் என்று கஸ்தூரி அத்தாச்சி கேட்க, மொத்த உண்மையையும் போட்டு உடைகிறார். மீனாவின் அப்பா திருட்டு பட்டம் கட்டியதில் இருந்து, கதிர் பணம் கொடுத்து உதவியது, முல்லை கோபத்தில் வந்து கத்தியது என கஸ்தூரி அத்தாச்சி மொத்த பிரச்சனையை போட்டு வாங்கி கொண்டார். இதை நேராக தனத்திடம் சொல்ல வேக வேகமாக மூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய சீரியல் முடிகிறது.

    நாளைய எபிசோடில் இதற்கு மீனா மற்றும் மொத்த குடும்பத்தின் ரியாக்‌ஷன் என்ன என்பதற்கு விடை கிடைத்துவிடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி