ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லை.. பாண்டியன் ஹோட்டல்! ரூட் மாறும் விஜய் டிவி சீரியல்!

இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லை.. பாண்டியன் ஹோட்டல்! ரூட் மாறும் விஜய் டிவி சீரியல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வேலை கிடைக்காததால் கண்னனும் - ஐஸ்வர்யாவும் சேர்ந்து இட்லி கடையை ஆரம்பித்து உள்ளனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மளிகை கடையை சுற்றி தான் மொத்த கதையும் நகர்ந்து வரும் நிலையில் இப்போது ஹோட்டல் பிசினஸூம் கையில் எடுத்துள்ளனர் பாண்டியன் பிரதர்ஸ்.

விஜய் தொலைக்காட்சியில் சிரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர்ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  தினமும் இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பாசத்திலும் சரி, கோபத்திலும் சரி பாண்டியன் பிரதர்ஸ் பின்னி எடுத்து விடுவார்கள். சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி அம்மா இறப்பது போல் எபிசோடுகள் ஒளிப்பரப்பான போது இவர்களின் நடிப்பை பார்த்து அழாத சீரியல் ரசிகர்களே இல்லை எனலாம். இந்த சீரியலின் வெற்றிக்கு நடிகர், நடிகைகளும் முக்கிய காரணம் எனலாம்.

இந்நிலையில் சீரியலில் தற்போது கதைக்களம் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கண்ணன் மீது திருட்டு பட்டம் கட்டி மீனா அப்பா கடையை விட்டு வெளியே துரத்தி விட்டார். ஆனால் இந்த உண்மை வீட்டில் யாருக்கும் தெரியாது. அதே சமயம் மூர்த்தி குடும்பம் சென்னைக்கு சென்று இருந்த போது கண்ணன் கடையை திறந்து வியாபாரம் செய்து லாபத்தையும் பெருக்கினார். ஆரம்பத்தில் கோபத்தில் கண்ணனை திட்டி தீர்த்த மூர்த்தி, கண்ணனின் வளர்ச்சியை பார்த்து மனம் நெகிழ்கிறார்.

பாண்டியன் பிரதர்ஸ் என்றாலே அவ்ர்களின் மளிகை கடை மிகப் பெரிய அடையாளம். இந்த சீரியலில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் கடையை சுற்றி தான் நடக்கும். இப்படி இருக்கையில் கண்ணன், இப்போது புதிய ஹோட்டல் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். வேலை கிடைக்காததால் கண்ணனும் - ஐஸ்வர்யாவும் சேர்ந்து இட்லி கடையை ஆரம்பித்து உள்ளனர்.

இதை பார்த்த மீனா ஆச்சரியத்தில் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் பாண்டியன் ஸ்டோர்ஸ் மாதிரி பாண்டியன் ஹோட்டலா? என கலாய்க்கிறார். விளையாட்டாக இருந்தாலும் கண்ணனின் இந்த முயற்சியை பார்த்து மொத்த குடும்பமும் பெருமிதம் கொள்கின்றனர். கண்ணன் பொறுப்பாக நடந்து கொள்வதாக நினைத்து சந்தோஷப்படுகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Vijay tv