• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சின்ன தப்பு செய்த தனம்... வீட்டை இரண்டாக்கி சண்டை போடும் மீனா!

சின்ன தப்பு செய்த தனம்... வீட்டை இரண்டாக்கி சண்டை போடும் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

மீனா பின்புறத்தில் இருந்து ஓடி வர, அந்தநேரம் தனம் தூங்கி கொண்டிருக்க சண்டை வெடிக்கிறது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று தனம் செய்த சின்ன தப்பை சுட்டிக்காட்டி குட்டி அண்ணி மீனா வீட்டை இரண்டாக்குகிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்த நபர்களும் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் உள்ளனர். வீட்டின் குட்டி அண்ணியான மீனாவுக்கு சந்தோஷம் ஒருபக்கம் என்றாலும் பொறாமை குணம் மேலோங்கி விட்டது. மொத்த குடும்பமும் தனத்தின் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவா, கதிர், மூர்த்தி எல்லோரும் எப்போதுமே தனத்தின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதாக இருப்பதால் அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறார் மீனா. அதன் தொடர்ச்சியாக இன்று வீட்டில் மீனாவால் சண்டை வெடிக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தில் தொடங்கி லட்சுமி அம்மாவின் மரணம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருக்க  தற்போது குடும்ப பிரச்சனை தலை தூக்க தொடங்கி விட்டது. இன்றைய எபிசோடில் மீனாவுக்கு அதிகப்படியான வீட்டு வேலை கொடுப்பதால் கடுப்பில் இருக்கிறார். இதற்கு முன்பு மீனா வீட்டில் சொகுசாக ஆடி ஓடி இருந்ததால் வீட்டு வேலை பார்ப்பது மீனாவுக்கு கஷ்டமாக இருக்கிறது. வீட்டு வாசலில் கோதுமை காய வைத்துக் கொண்டிருந்த மீனாவை பார்த்த கண்ணனுக்கு அப்படி ஒரு ஆச்சரியம். குட்டி அண்ணி வேலை பார்ப்பதை ஆச்சரியமாக கண்ணன் பார்க்க, ஐஸ்வர்யா வழக்கம் போல் மீனாவிடம் பேச்சு கொடுக்கிறார். மீனாவும் பதிலுக்கு பேச, பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலே ரொம்ப ரொம்ப நல்லவங்க நீங்க தான்னு மொத்த ஐஸ்ஸையும் தலை மேல் வைக்கிறாள் ஐஸ்வர்யா. மீனாவுக்கு குளு குளுவென இருக்க, காலேஜ் போகும் கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு பாய் சொல்கிறார்.

    இந்த பக்கம், கடை கட்டும் இடத்தில் இருக்கும் கதிரை பார்க்க ஏ.டி.எம் அதிகாரிகள் வருகின்றனர். கடை வைக்கும் இடத்தில் ஏ.டி.எம் மிஷின் வைக்க அனுமதி தருவது குறித்து அவர்கள் கதிரிடம் ஏற்கெனவே பேசி இருந்த நிலையில் மூர்த்தி அதை வேண்டாம் என்றார். இதனால் முல்லைக்கு மூர்த்தி மீது வருத்தம். இந்நிலையில் மீண்டும் அவர்கள் அட்வான்ஸ் குறித்து பேச கதிரை பார்க்க வந்தனர். அண்ணன் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கதிர் கூறுகிறான். இதனால் கோபத்தில் அதிகாரிகள் கதிரை திட்டி விட்டு செல்கின்றனர். முல்லை இதனால் வருத்தப்படுகிறாள். பின்பு கதிரும் இறங்கி கட்டிட வேலைகளை கவனிக்கிறான்.

    செஃப் தாமுவின் மகள் தொடங்கிய மருத்துவமனை... குவியும் வாழ்த்துக்கள்!

    வீட்டு வேலைகளை மீனா செய்து கொண்டிருக்க, கயல் பாப்பாவை முல்லை தனத்திடம் கொடுக்கிறாள். தனமும் கயலை கொஞ்சி விளையாடி கொண்டிருக்க, அசதியில் தெரியாமல் தூங்கி விடுகிறார். இதுதான் தனம் செய்த தப்பு. உடனே கயல் பாப்பா அழுதுக் கொண்டே வெளியே ஓடி வருகிறாள். கயல் பாப்பாவின் சத்தத்தை கேட்டி மீனா பின்புறத்தில் இருந்து ஓடி வர, அந்தநேரம் தனம் தூங்கி கொண்டிருக்க சண்டை வெடிக்கிறது. முல்லையிடம் மீனா கோபித்து கொள்கிறாள். முல்லை தான் குழந்தையை தனத்திடம் கொடுத்ததால் மீனா முல்லையை திட்டி விடுகிறார். இது எதுவுமே தெரியாமல் தனம் தூங்கி கொண்டிருக்க, இன்றைய எபிசோடு மீனாவின் சண்டையுடன் முடிகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: