ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஐஸ்வர்யா - கண்ணனுக்கு எதிரியாகும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று!

ஐஸ்வர்யா - கண்ணனுக்கு எதிரியாகும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்த மீனாவே, இப்போது அவர்களுக்கு எதிரியாக மாறிவிட்டார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனா கதாபாத்திரம் நெகட்டிவ் ரோலுக்கு மாறுகிறது. கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு வில்லியாக மாறுகிறார் மீனா. இன்றைய எபிசோடில் மீனா நடந்து கொண்ட விதம் வீட்டில் இருந்த யாருக்கும் பிடிக்கவில்லை.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ஆனந்தம் படத்தின் சிரீயல் வேர்ஷன் என்றாலும் அதை ரசிக்கவும் தனியாக ஒரு கூட்டமே இருக்கிறது. அண்ணன் - தம்பிகளின் பாசம், கூட்டு குடும்பங்களின் முக்கியத்துவத்தை சொல்லும் இந்த சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு மொத்த கதையும் வேறு கோணத்தில் பயணிக்க தொடங்கியது. இத்தனை பிரச்சனகளுக்கு பிறகு கண்ணன் - ஐஸ்வர்யாவை தனம் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார். ஆரம்பத்தில் இதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது மீனாவுக்கு, ஐஸ்வர்யாவை பார்த்தாலே பிடிக்காதது போல் ஆகிவிட்டது.

  இதையும் படிங்க.. அருள் வாக்கு சொன்ன சாமியார்... உடனே திருந்திய சீரியல் ஹீரோ!

  ஐஸ்வர்யாவின் துடுக்கான பேச்சும், மீனாவை கிண்டல் அடிப்பதும் மீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நைட்டி பிரச்சனையில் ஐஸ்வர்யாவுக்கு எல்லோரும் சப்போர்ட் செய்ததும் மீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் மீனா கோபத்திலே இருக்கிறார். இந்த கோபத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஐஸ்வர்யா மீது காட்டுகிறார்.

  இதையும் படிங்க.. பிக் பாஸ் 5 இறுதி போட்டிக்குள் நுழையும் இரண்டாவது நபர்! அடுத்த ட்விஸ்ட்

  இன்றைய எபிசோடிலும் அது தான் நடக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகும், கண்ணனும்- ஐஸ்வர்யாவும் காலேஜ் செல்கின்றனர். தனம் ஏற்கெனவே இதை பற்றி இருவரிடமும் பேசி இருந்தார். தனத்தின் பேச்சை மதித்து இருவரும் மீண்டும் காலேஜ் செல்ல முடிவு எடுக்கின்றனர். உடனே, தனம் இருவருக்கும் காசு கொடுக்கிறார். விழுந்து விழுந்து கவனித்து அனுப்புகிறார்.

  இதைப்பார்த்த மீனாவுக்கு கோபம் வருகிறது. உடனே, கண்ணனும் - ஐஸ்வர்யாவும் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டது, லட்சுமி அம்மா இறந்தது, இப்போது சொகுசாக வாழ்வதை பற்றி நக்கலாக பேசி குத்தி காட்டுகிறார். இதனால் அனைவரின் முகமும் மாறுகிறது. மீனா பேசுவதை பார்த்து தனம் முகமும் மாற, முல்லை தனியாக கூப்பிட்டு மீனாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.

  முதன் முதலாக கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்த மீனாவே, இப்போது அவர்களுக்கு எதிரியாக மாறிவிட்டார். வரும் நாட்களில் இந்த பிரச்சனை கண்டிப்பாக பெருசாகலாம்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv