• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எல்லா தப்பும் நடக்குற வீடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்... வெடிக்கும் மீனா! காரணம் முல்லையா?

எல்லா தப்பும் நடக்குற வீடு பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்... வெடிக்கும் மீனா! காரணம் முல்லையா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இன்றும் பிரச்சனை வெடிக்கிறது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை பேசிய பேச்சால், ஜீவாவிடம் கோபத்தில் வெடிக்கிறார் மீனா.

    கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு அன்ண்ணன் - தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் சங்கடமான சூழல்களை வைத்து கதைக்கரு அமைக்கப்படுள்ளது. கூட்டுக் குடும்பத்துக்கு வரவேற்பு இருக்கும் தமிழ்நாட்டில், இந்த சீரியலுக்கு ரசிகர்களும் நல்ல ஆதரவைக் கொடுத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக சோகமும், கோபமும் நிறைந்த எபிசோடுகளாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இன்றும் பிரச்சனை வெடிக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எப்போது பிரச்சனை வந்தாலும் அதற்கு காரணம், குட்டி அண்ணி மீனாவாக தான் இருப்பார். ஆனால் தற்போது சீரியலில் முல்லையின் துடுக்கான  பேச்சும் பிரச்சனைக்கு காரணமாகி குடும்பத்தில் தேவையில்லாத சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய எபிசோட்டின் தொடர்ச்சியாக, கதிருக்கு அட்வைஸ் செய்கிறார் மூத்த அண்ணி தனம். இனிமேல் கட்டிட வேலையை செய்ய வேண்டாம் என்றவர், ஏ.டி.எம் மிஷின் விஷயத்தை மூர்த்தி வேண்டாம் என்று சொல்லிய காரணத்தையும் விளக்குகிறார். ஆனால் இவ்வளவு விளக்கம் வேண்டாம் அண்ணா, சொல்லுறது தான் இறுதி முடிவு என்கிறார் பாசம் குறையாத தம்பி கதிர். இவர்களின் அண்ணன் தம்பி பாசத்தை பார்த்து தனத்திற்கு கண்ணீரே வந்து விடுகிறது.

    ஆனால் மீனா இதை சும்மா விடவில்லை. ஜீவா விளையாட்டு தான் அப்படி சொன்னா, நீங்க ஏன் சண்டை போட்டீங்கன்னு முல்லையிடம் போய் கேட்கிறாள். அதற்கு முல்லையும் கோபத்தில் பேசி விட்டதாக பதில் சொல்ல, இந்த பிரச்சனையை ஒரு நிமிடத்தில் ஜீவா முடித்து வைக்கிறார். நேராக முல்லையிடம் வந்து கதிரை அப்படி சொன்னதற்கு மன்னிப்பு கேட்டார். இதனால் முல்லை - கதிருக்கும் தர்ம சங்கடமாக மாறியது. ஆனால் மீனாவுக்கு கோபம் தலைக்கு ஏறியது. ஜீவாவிடம் நீ ஏன் மன்னிப்பு கேட்ட என்று சண்டை போடுகிறார். முல்லையும் அப்படி பேசியது தப்பு தான் என கதிரிடம்  மன்னிப்பு கேட்டார்.

    அன்றே கணித்தார் பிரியங்கா.. வெளி வரும் தாமரையின் உண்மை முகம்!

    காலையிலேயே வீட்டில் பிரச்சனை வெடிக்க, மனசு கேட்காத மூர்த்தி கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு போய் கதிரிடம் மனம் விட்டு பேசுகிறார். மேஸ்திரியிடம் இனி கதிரை  கட்டிட வேலையை பார்க்க விட கூடாது என்று ஆர்டர் போடுகிறார். ஏடிஎம் மிஷின் விஷயத்தை பற்றியும் பேசுகிறார்.

    அதற்குள் வீட்டில் இருக்கும் தனத்திடம் ஜீவா மன்னிப்பு கேட்ட விஷயத்தை பற்றி மீனா சொல்ல, தனமும் ஜீவானின் செயலை நினைத்து பெருமை படுகிறார். ஆனால் மன்னிப்பு கேட்டது என புருஷன் எனக்கு வருத்தமா இருக்கிறது என்றார் மீனா. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எல்லா தப்பும் நியாயப்படுத்தபடுவதாக சொல்லி மூஞ்சை சுளிக்கிறார். அப்போது முல்லை வர அந்த கோபத்தை முல்லையிடம் காட்டுகிறார் மீனா. வழக்கம் போல் இரண்டு பேரும் வாய்க்கால் தகராரில் ஈடுபட, இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார் தனம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: