• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திருட்டு பட்டம்.. ஓடி வந்து உதவிய கதிர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திருட்டு பட்டம்.. ஓடி வந்து உதவிய கதிர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் .கடையில் பணத்தை திருடியது யார்? என்ற உண்மை மீனா அப்பாக்கு தெரிந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும்

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு திருட்டு பட்டம் கட்டப்பட, ஓடி வந்து தம்பிக்கு உதவுகிறார் கதிர்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அதிரடியாக பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. தனம் கர்ப்பமாக இருப்பதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மாவான லக்ஷ்மி அம்மா இறப்பும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய சந்தோஷத்தையும், மிகப்பெரிய துக்கத்தையும் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியது.லட்சுமி அம்மாவின் இறப்புக்குப் பிறகு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கதைக்களம் மாறி வருகிறது. தனம் மற்றும் மூர்த்திக்கு ஆண் குழந்தை பிறந்ததையொட்டி, குடும்பம் முழுவதுமே கொண்டாட்டமான மனநிலையில் இருந்தது. சில தினங்களுக்கு முன்பு தனம் மற்றும் மூர்த்தியின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது. ஆனால் அந்த விழாவில் கூட தனத்தின் அம்மாவால் பிரச்சனை வெடித்தது.

    கண்ணனுக்கு குழந்தையை காட்ட மீனா குழந்தையை வெளியில் தூக்கி போக, இது மிகப் பெரிய பிரச்சனையை வீட்டில் ஏற்படுத்தி விட்டது. மீனாவை பார்த்து தனத்தின் அம்மா சரமாரியாக திட்ட, மீனாவின் அப்பாவுக்கு கோபம் வருகிறது. மீனா இப்படி திட்டு வாங்க கண்ணன் தான் காரணம் என நினைத்துக் கொண்டு வழக்கம் போல் மீனாவின் அப்பா, கடையில் வேலை செய்யும் கண்ணன் - ஐஸ்வர்யாவை திட்டுகிறார். அவர் எவ்வளவு திட்டினாலும் ஐஸ்வர்யாவும் கண்ணனும் அதை பொறுத்துக் கொண்டு அமைதியாக செல்கின்றனர்.

    இந்த நேரத்தில் தான் கடையில் பணம் காணாமல் போகிறது. ரூ. 15000 பணத்தை கண்ணன் எடுத்துவிட்டதாக மீனாவின் அப்பா கண்ணன் - ஐஸ்வர்யா மீது திருட்டு பட்டம் கட்டுகிறார். இருவரும் செய்வதறியாமல் கலங்கி நிற்கின்றனர். இரவு 8 மணி வரை டைம் கொடுக்கும் மீனாவின் அப்பா, ஒருவே்ளை பணம் வரவில்லை என்றால் வீட்டுக்கு வந்து சத்தம் போடுவேன் என மிரட்டுகிறார். இந்த அசிங்கத்துக்கு பயந்து கொண்டு ஐஸ்வர்யாவும் கண்ணனும் வீட்டுக்கு வராமல் ரோட்டிலே நிற்கின்றனர். அந்த நேரம் பார்த்து தான் கதிர் அந்த வழியே செல்ல, கண்ணனை பார்த்து என்ன பிரச்சனை என விசாரிக்கிறார். கண்ணனும் - ஐஸ்வர்யாவும் நடந்த எல்லாவற்றையும் சொல்லி அழுகின்றனர். மனசு கேட்காத கதிர், உடனே கையில் இருக்கும் கடை காசை எடுத்து கண்ணனிடம் கொடுக்கிறார். முதலில் வேண்டாம் என சொல்லிய கண்ணன், வேறு வழியில்லாமல் அந்த காசை வாங்கி மீனாவின் அப்பாவிடம் கொடுத்து விடுகிறார்.

    வீட்டுக்கு வரும் கதிர், முல்லையிடம் மட்டும் நடந்த எல்லாவற்றையும் பற்றி கூறுகிறார். இப்ப கடை காசுக்கு என்ன பண்ண போறீங்கன்னு முல்லை விசாரிக்கிறார். வழக்கத்தை விட வீட்டுக்கு சீக்கிரமாக வரும் கண்ணன் - ஐஸ்வர்யாவிடம் மீனா பேச்சு கொடுக்க, ஐஸ்வர்யா எல்லா உண்மைகளையும் சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் கண்ணன், குட்டி அண்ணிக்கு எதுவும் தெரிய வேண்டாம் என நினைத்து மறைக்கிறார். உண்மையில் கடையில் பணத்தை திருடியது யார்? என்ற உண்மை மீனா அப்பாக்கு தெரிந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும். ஆனால் தம்பிக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் முதல் ஆளாக ஓடி வந்து உதவும் கதிர் எல்லோர் மனசிலும் நிற்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: