Home /News /entertainment /

சந்தோஷமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

சந்தோஷமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இந்த விஷயம் கூடிய விரைவில் தெரிய வருவது போல தான் ட்விஸ்ட் இருக்கும்

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஆனால் கூடிய விரைவில் இவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்ற அப்டேட் இணையத்தில் பரவி வருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது கதிர் - முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தான் மொத்த குடும்பம் இருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் தெரிந்த பின்பு வீட்டில் இருக்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்து முல்லை - கதிருக்கு துணை நின்றனர். வீடு கட்டுவதை கூட விட்டுட்டு முல்லைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கலாம் என்று முடிவு எடுத்தனர். ஆனால் அதற்குள் முல்லை கோவில், பூஜை, பரிகாரம் வரை சென்று விட்டார். இதை பார்த்து கஷ்டப்பட்ட, மூர்த்தி உடனே 5 லட்சத்தை ரெடி செய்து முல்லைக்கு ட்ரீமெண்ட் எடுக்க சொன்னார்.

    கல்யாண வீட்டு வத்தக்குழம்பு.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!

    கதைப்படி இப்போது முல்லைக்கு ட்ரீட்மெண்ட் தொடங்கி விட்டது. முல்லையை கதிர் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார். அதுமட்டுமில்லை, அவரை ஒருவேளை கூட செய்யவிடாமல் தாங்குகிறார். இதைப்பார்த்து மொத்த குடும்பத்திற்கும் பொறாமை தான். அதே போல் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என ஆவலுடன் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இன்றைய எபிசோடில் டாக்டர், முல்லைக்கு கூடிய விரைவில் கரு உருவாகி விடும் என்று கூறிவிட்டார்.

    இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செம்ம ஹாப்பி, முல்லையின் அப்பா, அம்மா பெண் குழந்தை பிறந்தால் தனலட்சுமி என பெயர் வைக்க வேண்டும் என்பது வரை யோசித்து விட்டனர். ஆனால் இந்த சந்தோஷத்தில் மிகப் பெரிய இடி விழுவது போல் திரைக்கதை வரவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றனர். இந்த ட்ரீட்மெண்ட் மூலமாக முல்லைக்கு குழந்தை பிறக்காது என்பது தான் அந்த அதிர்ச்சி தகவல்.

    மே 1 அன்று குஷ்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸ்!

    மொத்த குடும்பத்திற்கும் இந்த விஷயம் கூடிய விரைவில் தெரிய வருவது போல தான் ட்விஸ்ட் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை ரொமான்ஸூக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டம் இருக்கிறது. அதனால் அவர்களின் கதையில் எந்த மாற்றமும் செய்துவிட வேண்டம் எனவும் ரசிகக்ரள் கூறி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி