ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மீனாவின் தங்கை ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகியிருக்கிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்திக்கு பதில் பவ்யாஸ்ரீ மாற்றப்பட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் 2018ம் ஆண்டு முதல் இன்று வரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. மற்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடும்பத்தை பிரிப்பது, கணவன் - மனைவி உறவை கலைப்பது போன்ற வழக்கமான விஷயங்கள் இல்லாமல், 4 அண்ணன் - தம்பிகளையும் அவர்களது கூட்டு குடும்பத்தை பற்றியும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், லாவண்யா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்.

இதில் முல்லை கதாபாத்திரத்தில் முதலில் விஜே.சித்ரா நடித்து வந்தார். பின்னர் அவரது மறைவுக்குப் பிறகு காவ்யா அறிவுமணி முல்லையாக நடித்தார். சில மாதங்கள் முன்பு அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகவே தற்போது லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

முன்னாள் சன் மியூசிக் தொகுப்பாளரை கரம் பிடித்த ’சந்திரலேகா’ ஸ்வேதா பண்டேகர்!
 
View this post on Instagram

 

A post shared by VijayTvExpresss (@vijaytvexpresss)இந்நிலையில் மீனாவின் தங்கை ஸ்வேதாவாக நடித்து வந்த கீர்த்தி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகியிருக்கிறார். கர்ப்பமான காரணத்தால் அவர் சீரியலை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பதில் பவ்யாஸ்ரீ, இனி ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Vijay tv