முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. பெண் அரசியல் பிரபலம் கையால் விருது வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. பெண் அரசியல் பிரபலம் கையால் விருது வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்ஷினிலும் இவர் தான் ஹீரோயின்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி புகழ் சுஜிதா, தெலுங்கானா கவுர்னர் தமிழிசை சவுந்தராஜன் கையால் விருது பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தை சுஜிதா, மிகுந்த சந்தோஷம் மற்றும் உற்சாகத்துடன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ் சீரியல்களில் டாப் 3ல் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் நாள்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இத்தனை எபிசோடுகளை கடந்து மிகப் பெரிய வெற்றி பயணத்தில் செல்ல மிக முக்கியமான காரணம், இந்த சீரியல் மற்ற எல்லா சீரியலில் இருந்து வேறுப்பட்டு நிற்பது தான். சீரியல் என்றாலே மாமியார் மருமகள் சண்டை, வில்லி, பழிவாங்குவது என பழைய பாட்டை பாடாமல் வில்லன், வில்லி எதுவும் இல்லாமல் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை தாண்டி எப்படி கூட்டு குடும்பமாக சேர்ந்து வாழ்கிறார்கள் இப்படி தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது.

ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு தனிப்பட்ட முறையில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் கூட்டமே இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இப்போது வரை அதே நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். இதில் மூத்த அண்ணியாக தனம் என்ற ரோலில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய பங்களிப்பை திரைத்துறையில் தந்து வருகிறார்.
 
View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)வெள்ளித்திரை, சின்னத்திரை மட்டுமில்லை பிராந்திய மொழிகளிலும் இவரின் நடிப்பு தொடர்கிறது. ஏகப்பட்ட குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் அறிமுகமாகி பாதியிலே சினிமாவை விட்டு விலகியும் சென்றுள்ளனர். ஆனால் சுஜிதாவுக்கு சினிமா கெரியர் மிகப் பெரிய அளவில் கைக்கொடுத்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு வெர்ஷினிலும் இவர் தான் ஹீரோயின். இப்படி இருக்கையில் இத்தனை வருட கடின உழைப்புக்கு அங்கீகாரமாக சுஜிதாவுக்கு “ சிறந்த ரோல் மாடல் நடிகை” என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது. “மாண்புமிகு மகளிருக்காக” என்ற விருது நிகழ்ச்சியில் தெலுங்கானா கவுர்னர் தமிழிசை சவுந்தராஜன் சுஜிதாவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு மட்டும் ஓகே சொல்வேன். விஜய் டிவி நடிகை சொன்ன ஷாக்கிங் தகவல்!

விருதை பெற்ற சுஜிதா தனுஷூக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv