• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கண்ணன் எது பண்ணாலும் தப்பா மூர்த்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அவசர முடிவு

கண்ணன் எது பண்ணாலும் தப்பா மூர்த்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் அவசர முடிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் கண்ணனுக்கும் உரிமை இருக்கிறது என தனம் பேசியது மூர்த்தியின் கோபத்தை அடக்கியது.

  • Share this:
    கண்ணன் நல்லதே பண்ணாலும் அது தப்பா தான் இருக்கும் என நினைக்கும் மூர்த்தி மறுபடியும் கண்ணனை கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துகிறார். ஆனால் இந்த முறை கண்ணனுக்கு ஆதரவாக கதிரும், தனமும் கைகோர்த்து நின்றது மிகப் பெரிய ஆறுதல் தான். பாண்டியஸ் ஸ்டோர்ஸ் கடையை கண்ணன் திறந்தது எந்த தப்பும் இல்லை என அடித்து பேசுகிறார் தனம். இதனால் மூர்த்திக்கு என்ன பதில் பேசுவதுன்னு கூட தெரியவில்லை.

    அண்ணன் - தம்பி உறவுகளுக்கு எடுத்துக்காட்டாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டும் விறுவிறுப்பை எட்டியுள்ளது. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என பாடிக் கொண்டிருந்த குடும்பம், கடைக்குட்டி கண்ணன் காதலால் இரண்டாக பிரிந்தது. வீட்டை விட்டு வெளியேறி கண்ணன், காதல் கல்யாணம் செய்ய,அவரை வீட்டை விட்டு மூர்த்தி வெளியே அனுப்பினார். கண்ணன் வீட்டை விட்டு போன சோகம் தாங்க முடியாமல் லட்சும் அம்மா உயிரிழந்தார். அம்மாவின் மறைவுக்கு பின்னர் கண்ணனுக்கு வேற எந்த உறவும் இல்லை என புரிந்து கொண்ட மூர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக கண்ணன் மீது இருந்த கோபத்த குறைத்து கொண்டார்.

    இதற்கு ஏதுவாக கண்ணன், எதிர் வீட்டில் குடி வர, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கியது. தனம் சாப்பாடு கொடுப்பது, மீனா ஐஸ்வர்யாவுடன் சகஜமாக பேசுவது, முல்லையும் கண்ணனிடம் பேச்சு வார்த்தை வைத்து கொள்வது என கதை சூடுப்பிடித்தது. இந்த நேரத்தில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சென்னைக்கு சென்றனர். ஆனால் அவர்கள் சென்னை போன விஷயம் கண்ணனுக்கு தெரியாது. இந்த நேரம் பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு எதிரில் புதியதாக லட்சுமி ஸ்டோர்ஸ் திறந்து ஆஃபரில் பொருட்களை வியாபரம் செய்கின்றனர். இதைப் பார்த்த கண்ணன், நம்ம கடையோட பழைய கஸ்டமர்ஸ் புது கடைக்கு போய் விடுவார்களோ என்ற பயத்தில் திருட்டு தனமாக மூர்த்தி வீட்டுக்குள் போய் கடை சாவியை திறந்து எடுத்து  பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை திறந்து வைக்கிறார்.

    இன்றைய தினம், சென்னையில் இருந்து கிளம்பி மீண்டும் குன்னக்குடி வந்த மூர்த்தி குடும்பத்தினர், கண்ணன் கடை திறந்த விஷயத்தை கேட்டு கோபம் கொள்கின்றனர். அதுமட்டுமில்லை மூர்த்தி கண்ணனை கூப்பிட்டு அடிக்க கை ஓங்குகிறார். ஆனால் தனம் அதை தடுத்து நிறுத்தி கண்ணனுக்கு ஆதரவாக பேசுகிறார். கதிரும் கண்ணனுக்காக பேச, மூர்த்திக்கு கோபம் வருகிறது. அதுமட்டுமில்லை கண்ணன் நல்லது நினைத்தே இப்படி செய்ததாகவும், கடையில் கண்ணனுக்கும் உரிமை இருக்கிறது என தனம் பேசியது மூர்த்தியின் கோபத்தை அடக்கியது.

    லாஸ்ட் பென்ச் சிபி ஹீரோவான கதை.. எல்லா புகழும் அக்‌ஷராவையே சேரும்

    கண்ணன் கடைக்கு போகாமல் வீட்டில் இருப்பது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என மீனா நினைத்து, தனது அப்பாவுக்கு ஃபோன் செய்கிறார். இத்துடன் எபிசோடும் முடிகிறது. நாளை தான் கண்ணன் கடைக்கு போகாத உண்மையான காரணம் பற்றி மீனாவுக்கு தெரிய வரும். அப்படி தெரிந்த பின்பு மீனாவின் சப்போர்ட் யாருக்கு? என்பது தான் சீரியலின் அடுத்த திருப்பம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: