• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • நடு இரவில் கேக் கட்டிங்.. செல்ஃபீஸ்! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

நடு இரவில் கேக் கட்டிங்.. செல்ஃபீஸ்! பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அப்படி என்ன விசேஷம் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டம்.

எதிர்பாராத ட்விஸ்ட்டாக கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம் நடந்ததால் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் பார்த்தனர்.

 • Share this:
  தமிழ் சின்னத்திரை ரசிகர்களை டிவி முன் ஆர்வமுடன் உட்கார வைக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  எனினும் எந்த ஷோக்களையும் பின்னுக்கு தள்ள முடியாத ஒரு நிகழ்ச்சி வகை இருக்கிறது என்றால் அது நெடுந்தொடர் என்றழைக்கப்படும் மெகா சீரியல்கள் தான். பிரபல முன்னணி சேனல்கள் அனைத்திலுமே சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரசிகர்களை பெரிதும் ஈர்க்கும் பல சீரியல்கள் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

  பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீசன் 2, காற்றுக்கென்ன வேலி, தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி, ராஜபார்வை, பாவம் கணேசன், வேலைக்காரன், ஈரமான ரோஜாவே, அன்புடன் குஷி, நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி பிஏ, மௌன ராகம், செந்தூரப்பூவே உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

  மேற்காணும் பட்டியலில் விடுபட்ட முக்கியமான ஹிட் சீரியலில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய ஹிட் சீரியல்களின் பட்டியலில் ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய மூன்றும் ரசிகர்கள் தவறாமல் பார்க்கும் சீரியல்களாக இருந்து வருகின்றன. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் சமீப மாதங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் இருந்து வந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளி தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்துள்ளது.

  அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. மறைந்த பிரபல விஜே சித்ரா இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். முன்பே இந்த சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட, சித்ராவின் மரணத்திற்கு பிறகு இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. வலுவான கதையம்சம் மற்றும் அதிகரித்த ரசிகர் எண்ணிக்கை காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி ரேட்டிங்கில் சில காலம் முதலிடம் பிடித்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன் பின்னர் பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பாக சென்றதை அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸை பின்தள்ளி டாப்பிற்கு வந்தது பாரதி கண்ணம்மா. இதனிடையே கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் காட்டப்படும் குடும்பத்தின் மிக இளையவனான கண்ணன், தனது சொந்தகார மற்றும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுமான ஐஸ்வர்யாவை குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் கூட்டிச்சென்று கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் காட்சிகள் ஒளிபரப்பாகின.  ஐஸ்வர்யாவிற்கு உறவுக்கார பையன் பிரஷாந்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத ட்விஸ்ட்டாக கண்ணன் - ஐஸ்வர்யா திருமணம் நடந்ததால் ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் சீரியலை பார்த்து வந்தனர். இதனால் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் மளமளவென எகிறியது.

  சீரியலுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்மந்தமே இருக்காது.. ராஜா ராணி புகழ் ’மயிலு’ யார் தெரியுமா?

  இதனை அடுத்து சமீபத்திய ரேட்டிங் படி விஜய் டிவி சீரியலிகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 12.4 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், 12.3 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா இரண்டாவது இடத்திலும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தில் பாக்கியலட்சுமி, ராஜா ராணி 2 ஆகிய சீரியல்கள் இருக்கின்றன. தமிழும் சரஸ்வதியும், நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம் உள்ளிட்ட சீரியல்கள் இதற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.பல மாதங்களுக்கு பிறகு ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் மகிழ்ச்சியை பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் மற்றும் குழுவினர் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: