Home /News /entertainment /

தாலி வாங்க போன கண்ணன் திரும்பி வந்தால் தான் கல்யாணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!

தாலி வாங்க போன கண்ணன் திரும்பி வந்தால் தான் கல்யாணம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

Pandian Stores Today Episode: விஜய் டிவி இந்த வாரம் முழுக்க அவர்களின் ரகசிய திருமணம், சண்டை என நகர்த்த போவது உறுதியாகிவிட்டது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சித்ராவின் மறைவுக்கு பின் பல திருப்பங்களை சந்தித்தது.

    கடந்த சில மாதங்களாக கதையோட்டம் மொத்தமாக கண்ணன் ஐஸ்வர்யா பிரசாத் நோக்கியே நகர்ந்து வருகிறது. அண்ணன்களின் வாக்கே தெய்வ வாக்கு என வாழ்ந்து வந்த கண்ணன் இன்று வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். எல்லாம் காதல் படுத்தும்பாடு தான்.

    இந்நிலையில் வாரத்தின் தொடக்கத்திலேயே கண்ணன்- ஐஸ்வர்யா ப்ரமோவை போட்டு பரபரப்பைக் கூட்டிய விஜய் டிவி இந்த வாரம் முழுக்க அவர்களின் ரகசிய திருமணம், சண்டை என நகர்த்த போவது உறுதியாகிவிட்டது. சரிவாருங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்டைப் பார்ப்போம்.

    நேற்றைய தினம் ஐஸ்வர்யாவை அழைத்துகொண்டு தனது நண்பர்களை பார்க்க சென்ற கண்ணன் இன்று திருடனை போல் ரோட்டில் நடந்து செல்பவர்களை எல்லாம் பார்த்து பயந்து நடுங்கிறான். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரிந்த ஒருவர், கண்ணனை பார்த்து நலம் விசாரிக்க அவருக்கு பதில் கூறிவிட்டு ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்ய காரில் புறப்படுகிறான்.

    ஒருபுறம் பிரசாத் கண்ணனை தேடிய அலைகிறான். அப்போது தான் கண்ணனின் நண்பன் ஒருவன் பிரசாத் கண்ணில் பட அவனிடம் “கண்ணோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை உடனே கண்ணனை பார்க்கனும்ன்னு” ஒரு கதையை சொல்லி கண்ணன் காரை வாடகைக்கு எடுத்த நபரிடம் அழைத்துச் செல்கிறான். அங்க போய் பார்த்தா கண்ணன் காரை எடுத்துக்கிட்டு காரைக்குடி போன விஷயத்த அந்த நபர் பிரசாத்திடம் போட்டு உடைக்கிறார்.அவ்வளவு தான் பைக்கிலேயே காரைக்குடி புறப்பட்டான் பிரசாத்.



    இந்த பக்கம் கஸ்தூரி அத்தை எப்போதும் போல வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு, கண்ணன் ஐஸ்வர்யாவை இழுத்துட்டு ஓடிட்டான்னு பயங்கரமா பேசிகிட்டு இருங்காங்க. அந்த நேரம் பார்த்து மூர்த்தி, கதிர் வீட்டுக்கு வர, தனம் அண்ணி, மீனா எல்லாரும் நடந்த சொல்லுறாங்க. கண்ணனுக்கு ஃபோன் போட்டா ஸ்விட்ச் ஆஃப். உடனே அவனை கையோடு அழைத்து வர மூர்த்தியும் ஜீவாவும் பைக்கில் கிளம்புகிறார்கள்.

    அதுக்குள்ள பிரசாத் 10 நிமிஷத்துல காரைக்குடி வந்து சேர்கிறான். ஆனா அவன் கண்ணுல மாட்டிகாமா கண்ணன் தப்பிச்சு கோயிலுக்குள் போயிருறான். ஐஸ்வர்யாவும் - கண்ணனும் ஜம்முன்னு கல்யாண கோலத்தில் நிக்க, ஐயிர் வந்து கேக்குறாரு “தாலி எங்கப்பா” அப்ப தான் தாலி வாங்கனும் அப்படின்னே கண்ணனுக்கு தெரியுது. உடனே நான் போய் வாங்கிவிட்டு வரன்னு மாப்பிள்ளை கோலத்தில் கண்ணன் மார்க்கெட் கிளம்புறான். திரும்பி தாலியோட வந்தாதான் கல்யாணம்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, Vijay tv

    அடுத்த செய்தி