• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த சோகம்... கண்ணீர் விட வைக்கும் லேட்டஸ்ட் ப்ரமோ!

பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த சோகம்... கண்ணீர் விட வைக்கும் லேட்டஸ்ட் ப்ரமோ!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

சூப்பர் மார்கெட் வேலை விஷயமாக ஜீவாவின் மாமனார், கண்ணனை திருச்சி வரை அனுப்பி இருக்கும் நிலையில் தான் எதிர்பாராத விதமாக லட்சுமி இறந்து விடுகிறார்.

  • Share this:
விஜய் டிவி ரசிகர்கள் மற்றும் தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கடந்த சில நாட்களாக சோகத்தில் ஆழ்த்தி உள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 சகோதரர்கள் மற்றும் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் விஜய் டிவி-யில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் மெகா சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் சத்தியமூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கடைக்குட்டியான கண்ணன் ஆகிய 4 சகோதர்களின் தாயான லட்சுமி திடீரென்று இறந்து விடுவது போல கதை செல்கிறது.

இரு நாட்களாக மிகவும் உருக்கமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்களை தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கண்ணீர் விட வைத்து வருகிறது. சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கடைக்குட்டியான கண்ணன் செய்த காரியத்தால் நிலைகுலைந்து போகிறது. வீட்டின் கடைசி பிள்ளையான கல்லூரியில் படிக்கும் கண்ணன் தவிர்க்க முடியாத சந்தர்ப்ப சூழலால், ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது உறவுக்கார பெண் மற்றும் தன்னுடன் ஒரே காலேஜில் படிக்கும் ஐஸ்வர்யாவை காதலித்து வீட்டினர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு விடுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை நேரில் பார்த்து விடும் அவனது அண்ணண்களான ஜீவா மற்றும் கதிர் மனம் உடைந்து வீட்டிற்கு வந்து யாரிடம் சொல்லாமல் மவுனம் காக்கும் நேரத்தில், புது ஜோடி இருவரும் நேரடியாக வீட்டிற்கு வருகின்றனர். கண்ணனின் திருமண கோலத்தை பார்த்து அதிரும் பிற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப உறுப்பினர்கள் தம்பதி இருவரையும் வீட்டிற்குள் விடாமல் வெளியே அனுப்பி விடுகின்றனர். பின்னர் பல கஷ்டங்களுக்கு பிறகு ஒருவழியாக வீடு ஒன்றை பிடித்து ஐஸ்வர்யாவுடன் வாழ்க்கையை துவங்கும் கண்ணன், அண்ணி ஹேமாவின் அப்பா வைத்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்கிறார். கூடவே ஐஸ்வர்யாவும் அங்கேயே வேலைக்கு சேர்கிறார்.

இதனிடையே கண்ணனின் செயலால் மனமுடைந்து உடல்நலம் பாதிக்கப்படும் லட்சுமி அம்மா, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு நலமுடன் வீடு திரும்புகிறார். பழையபடி நன்றாக சிரித்து பேசி இயல்பு நிலைக்கு திரும்பும் லட்சுமியின் உயிர் யாருமே எதிர்பாராத வகையில் தூக்கத்திலேயே பிரிந்து விடுகிறது. அவர் இறந்த துக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுவது ரசிகர்களை பாதித்துள்ள நிலையில், அடுத்த பேரிடியாக கண்ணன் இறந்த தன் அம்மாவின் முகத்தை பார்க்க வரும் முன்னரே, உடல் வீட்டிலிருந்து சுடுகாட்டிற்கு தூக்கி செல்வது போல லேட்டஸ்ட் ப்ரமோ வெளியாகி ரசிகர்களை வருத்தமடைய செய்து உள்ளது.

சூப்பர் மார்கெட் வேலை விஷயமாக ஜீவாவின் மாமனார், கண்ணனை திருச்சி வரை அனுப்பி இருக்கும் நிலையில் தான் எதிர்பாராத விதமாக லட்சுமி இறந்து விடுகிறார். வேனில் திருச்சிக்கு செல்லும் கண்ணன் தனது மொபைலை எடுத்து செல்ல மறந்து விடுகிறார். தற்போது அந்த மொபைல் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் உள்ளது. இறந்த லட்சுமி அம்மாவின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் கிடத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஊர் பெரியவர்கள் கோவிலை நீண்ட நேரம் பூட்டியே வைத்திருக்க முடியாது, தெய்வ குத்தமாகி விடும். சீக்கிரம் உடலை எடுத்து விடுங்கள் என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தாரிடம் சொல்கிறார்கள்.

Also read... ரோஜா சீரியலில் நீடித்த சஸ்பென்ஸ் - சூட்டிங் ஸ்பாட்டுக்கு திரும்பிய பூஜா!

ஆனால் மூத்தவர் மூர்த்தி மற்றும் இவரது மனைவி தனம் ஆகியோர், கண்ணன் வராமல் அம்மாவின் உடலை எடுக்க முடியாது என்று கதறி அழுகின்றனர். இதற்கு மேல் உடலை வைத்திருப்பது ஊருக்கும் நல்லது இல்லை, வீட்டிற்கும் நல்லது இல்லை என்று பெரியவர்கள் கூற, வேறு வழி இன்றி லட்சுமி அம்மாவின் உடலை வீட்டிலிருந்து இடுகாட்டிற்கு தூக்கி செல்வது போல ப்ரமோவில் காட்டப்பட்டு, தாயின் முகத்தை இறுதியாக பார்க்க கண்ணன் வருவானா? என்ற கேள்வியுடன் முடிக்கப்பட்டு உள்ளது.



இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் "எப்படியாவது கண்ணன் அம்மா முகத்த பாக்குற மாதிரி கதையை கொண்டு போங்க"என்று சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: