• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியல் ஷூட்டிங்.. யூடியூப் சேனல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பிஸியோ பிஸி!

சீரியல் ஷூட்டிங்.. யூடியூப் சேனல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பிஸியோ பிஸி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

Pandian Stores Meena: கணவர், மாமியார் எனக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருப்பதால் தான் இது சாத்தியம் என்கிறார்.

  • Share this:
    பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

    தமிழில் பெரிய ஹிட்டான இந்த சீரியல் தற்போது இந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.அண்ணன் - தம்பி பாசம்.. தினமும் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், கூட்டு குடும்பம் என கதை நகர்வதால் பலருக்கும் பிடித்தமான சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. விஜய் டி தொடர்களிலே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்து வெற்றி கண்டுள்ளது.

    இந்த தொடர்களில் நடிக்கும் ஒவ்வொருவருமே தனித்தனியாக தனக்கென தனி ஃபேன்ஸ் ஃபாலோவை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக முல்லை ரோலில் நடித்த சித்ராவின் வாழ்க்கை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின்பு தான் தலைகீழாக மாறியது. கதிர்- முல்லை என்ற ஜோடியை ரசிக்க ஒரு கூட்டமே உண்டு. அவருக்கு அடுத்தப்படியாக மீனா ரோலில் நடிக்கும் ஹேமா.

    சீரியலில் இவரின் ரோல், அடிக்கடி கண்ணன் சொல்வது போல் “குட்டி அண்ணி நல்லவங்களா கெட்டவங்களா” அப்படிதான் போகும். ஆனால், வாய்த்துடுக்காக பேசும் நல்ல மருமகள் மீனா அதுதான் அவர் ரோலின் ஒன்லைன். ஒரு பாத்ரூமை வைத்தே மீனா 360 எபிசோடுகளை ஓட்டிருப்பார். அந்த அளவுக்கு மீனாவின் பாத்ரூம் சண்டை தீராத ஒன்று.

    சீரியலில் நடிக்கும் போதே ஹேமா திருமணாவர். பின்பு சீரியலில் அவர் மாசமாக இருப்பது போல் காட்டப்பட்ட எபிசோடுகளில் அவர் நிஜமாகவே கற்பமாக இருந்தார். அந்த நேரத்திலும் தனது ரோலை கச்சிதமாக நடித்துக்கொடுத்தார். பின்பு 3 மாதம் ஓய்வு எடுத்தார். அப்போது கூட சீரியலில் அவரின் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை இயக்குனர் காட்டவில்லை. இதை அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கையாகவே வைத்திருந்தனர். அதன் பின்பு கொரோனா லாக்டவுன் காலகட்டத்தை சந்திக்க நேரிட்டது. அந்த நேரத்தில் தான் ஹேமா ’ஹேமாஸ் டைரி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார்.

    pandian stores hema
    கணவருடன் ஹேமா


    வழக்கம் போல் அவரின் மேக்கப், டிப்ஸ், வீடு, ஃப்ரிட்ஜ் டூர், பியூட்டி டிப்ஸ் என தினமும் வீடியோக்களை போட்டு சந்தாகாரர்களை சேர்த்தார். 6 மாதத்திற்கு பின்பு அந்த யூடுயூப் சேனலும் சக்சஸ் தான். இப்போது 3 லட்சத்திற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கடந்து வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் அம்மாவாக தனது பணியை தொடர்கிறார். ஷூட்டிங் நடக்கும் நாட்களில் நடிப்பை தொடர்கிறார். இதற்கு நடுவில் அடிக்கடி லைவ்வில் தனது ரசிகர்களுடன் உரையாற்றுவார். இவரிடம் பலரும் கேட்க நினைப்பது டைம் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்? என்று தான். மீனாவும் சிரித்துக்கொண்டே எனது கணவர், மாமியார் எனக்கு துணையாக இருக்கிறார்கள். அவர்கள் இருப்பதால் தான் இது சாத்தியம் என்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: