Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அம்மாவின் நிஜ மகள் இவர் தானா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மா ரோலில் நடிக்கும் நடிகை ஸ்ரீவித்யா பற்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மாவாக நடிக்கும் நடிகை ஸ்ரீவித்யாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் தமிழ் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அதில் சீரியல்களும் ஒன்று. அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவி சீரியல்களில் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்த சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது . இதே டைமிங்கில் மற்ற சேன்ல்களில் புது புது சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது.

    2 குழந்தைகளுக்கு அம்மா.. அதே இளமை தோற்றம்! பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் குடும்பம்

    ரசிகர்களின் அபிமானம் பெற்ற சூப்பர் ஹிட் சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்கும் நடிகர்கள் சோஷியல் மீடியாவில் நிறைய ஃபாலோயர்ஸை கொண்டுள்ளனர். முக்கியமாக தனம் கேரக்டரில் நடிக்கும் நடிகை சுஜிதா, மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ்குமார் , கண்ணன் கேரக்டரில் நடிக்கும் சரவணன் விக்ரம் உள்ளிட்டோருக்கு சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம். இவர்களை தாண்டி இந்த தொடரில் நடிக்கும் பல்வேறு நடிகர் நடிகைகளும் கோஷியல் மீடியாவில் பயங்கர ஃபேமஸ். சீரியல் ரோல்களை காட்டிலும் இவர்களின் நிஜ குடும்பங்களை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

    சீரியல் நடிகையின் குடும்ப நிகழ்ச்சியில் அப்பவே கலந்து கொண்ட பாரதி கண்ணம்மா நடிகர்! காதல் வதந்தி உண்மை தானா?

    இதனால் அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களையும் ஃபாலோ செய்கின்றனர். அந்த வகையில். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அம்மா ரோலில் நடிக்கும் நடிகை ஸ்ரீவித்யா பற்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை.இவர் சன் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி என பல சேனலளில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். வெறும் சீரியலில் மட்டுமில்லை விஜய், அஜித் படங்களிலும் நடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Srividya Shankar (@srividya_2018)






    இவரின் மகள், சமீபத்தில் எத்திராஜ் கல்லூரியில் நடந்து முடிந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு கல்லூரி படிப்பை முடித்ததற்கான பட்டம் பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சி மிகுந்த தருணத்தில் ஸ்ரீவித்யாவும் அவருடன் சென்றுள்ளார். மகளுடன் அப்போது புகைப்படமும் எடுத்துள்ளார். இந்த தருணத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். ஸ்ரீவித்யாவின் மகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதுமட்டுமில்லை, உங்களுக்கு  இவ்வளவு சின்ன மகளா? பிறகு ஏன் சீரியல்களில் மாமியார், பெரியம்மா என வயது அதிகமுள்ள கதாபாத்திரங்களில் நடிக்கிறீர்கள்? எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி