• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீனாவுக்கு ஏற்படும் தலைகுனிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீனாவுக்கு ஏற்படும் தலைகுனிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மீனாவின் அப்பா, குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி மீனாவிடம் விசாரிக்கிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் மீனாவுக்கு தொடர்ந்து தலைகுனிவு ஏற்படுகிறது.

    கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.நான்கு அண்ணன் - தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் சங்கடமான சூழல்களை வைத்து கதைக்கரு அமைக்கப்படுள்ளது. விஜய் டிவியில் டி.ஆர்.பியில் போட்டி போடும் சீரியலில் இதுவும் ஒன்று. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக சோகமும், கோபமும் நிறைந்த எபிசோடுகளாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியான மூடுக்கு திரும்பியுள்ளது. மூத்த அண்ணி தனத்தின் வளைக்காப்புக்கு பிறகு, தனத்தின் குழந்தை பிறப்பில் தான் இந்த சந்தோஷம் கூடியிருக்கிறது என்றும் சொல்லாம்.

    லட்சுமி அம்மாவின் மறைவுக்கு பிறகு சோகமாக சென்று கொண்டிருந்தது சீரியல். அந்த நேரத்தில் கதை கண்ணன் - ஐஸ்வர்யா பக்கம் திரும்பியது. இருவரும் மூர்த்தியின் எதிர் வீட்டுக்கு குடி வந்தனர். அப்போது தான் கர்ப்பமாக இருக்கும் அண்ணி தனத்திற்கு, வயிற்று வலி ஏற்படுகிறது. கண்ணன், அண்ணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு தனத்திற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. கண்ணனுடன் குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இப்படி இருக்க, இன்றைய எபிசோடில் தனம் குழந்தைக்கு பெயர் சூட்டி, தொட்டிலில் போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சொந்தக்காரர்கள் அனைவரும் வீட்டுக்கு படை எடுக்கின்றனர். மீனா அப்பா அம்மா, முல்லையின் அம்மா அப்பா எல்லோரும் வருகின்றனர். வழக்கம் போல் மீனாவின் அப்பா, குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி மீனாவிடம் விசாரிக்கிறார். குழந்தையை எந்த தொட்டிலில் போட வேண்டும் என பேச்சு வர, தனத்தின் அண்ணா ஜெயா, புது தொட்டிலை வாங்கி வருகிறார். ஆனால் கயல் பாப்பாவுக்கு வீட்டில் இருந்த பழைய தொட்டிலை தான் போச வேண்டும் என்று பிரச்சனை வெடிக்கிறது.

    வீட்டில் வேறு எந்த பிரச்சனையும் வர கூடாது என்பதற்காக தனம் அண்ணி, அண்ணா மற்றும் அம்மாவை அழைத்து புது தொட்டில் வேண்டாம் என்கிறார். ஆனால் கஸ்தூரி அதை எல்லாம் கேட்காமல் புது தொட்டிலில் குழந்தையை போடுகிறார். இதனால் மீனாவுக்கு முகம் மாறுகிறது. இதை நோட் செய்த, மீனாவின் அப்பாவும் அம்மாவும் மீனாவை ஒருமாதிரி பேசுகின்றனர். அடுத்தது குழந்தைக்கு பெயர் வைக்கும் பிரச்சனை. லட்சுமி அம்மா ஆசைப்படி பாண்டியன் பெயரை வைக்க வேண்டும் என்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர். ஆனால் ஸ்கூலில் சேர்க்க, வேறு பெயரை வைக்கலாம் என்கின்றன தனத்தின் குடும்பத்தினர். கயலுக்கு பெயர் வைக்கும் போது இதே பிரச்சனை தான் பெரிதாக வெடித்தது. ஆனால் கடைசி வரை மீனாவின் பேச்சு வீட்டில் எடுபடவில்லை. ஆனால் இப்போது தனத்தின் குழந்தைக்கு எல்லாமே ஆசைப்படி நடக்கிறது. இதனால் மீனாவுக்கு தொடர்ந்து தலைக்குனிவு ஏற்படுகிறது.

    கண்ணன் அதைவிட பாவம், யாருமே கண்ணனை விஷேசத்திற்கு கூப்பிடாததால் கண்ணன் வாசலில் இருந்து எட்டி எட்டி பார்க்கிறான். இதை கதிர், முல்லை, மீனா கவனித்து கண்ணனை நினைத்து பரிதாப படுகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: