Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் : பாத்ரூம் பிரச்சனையை வைத்தே சீரியல் ஓடிடும் போல!

பாண்டியன் ஸ்டோர்ஸ் : பாத்ரூம் பிரச்சனையை வைத்தே சீரியல் ஓடிடும் போல!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் கண்ணன் - ஐஸ்வர்யாவை மொத்த குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதில் இருந்து கதையில் எந்த திருப்பங்களும், சுவாரசியங்களும் அரங்கேறுவது இல்லை.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதுசாக கன்டெண்ட் கிடைக்காத பஞ்சத்தால் இயக்குனர் மீண்டும் பாத்ரூம் பிரச்சனையை கையில் எடுத்துள்ளார். பாத்ரூம் பிரச்சனை, ரூம் பிரச்சனையை வைத்தே பல எபிசோடுகளை ஓட்டிய ஒரே பெருமைக்குரிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பல சீரியல்கள் மூவி டைட்டில்களை கொண்டுள்ளன. சின்னத்திரையில் இது ஒரு ராசி போல் ஆகிவிட்டது. வெள்ளித்திரை டைட்டிலை சின்னத்திரையில் பயன்படுத்தும் அனைத்து சீரியல்களும் டாப் ரேங்கில் இடம் பிடிக்கின்றன. இதில் ஒரு படி மேலே போய் வெள்ளித்திரை படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை எடுத்துக் கொண்டு 3 வருடங்களுக்கு மேலாக டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். ஆனந்தம் படத்தின் அதே ஸ்டோரியை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து இயக்குனர் இந்த சீரியலை சுவாரசியமாக ஓட்டி வருகிறார்.

  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல்  டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் வந்தது. இதற்கு காரணம் லட்சுமி அம்மா மறைவு மற்றும் கண்னன் - ஐஸ்வர்யா காதல் திருமணம். இந்த நிகழ்வுகளை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் கண்டு களித்தனர். அதன் பின்பு சீரியல் சற்று தொய்வை சந்தித்தது. மூத்த அண்ணி தனத்திற்கு குழந்தை பிறப்பது, அந்த குழந்தயை வைத்து மீனா சண்டை போடுவது என இப்படியே திரைக்கதை சென்று கொண்டிருக்கிறது. ஃபேமலி ஆடியன்ஸ் விரும்பும் சீரியலாக இருந்தாலும் தொடரில் சுறுசுறுப்பு இல்லை என்றால் மக்கள் சட்டுன்னு சேனலை மாற்றிக் கொண்டு போயிட்டே இருப்பார்கள்.

  ஃப்ரீஸ் டாஸ்க்.... மனைவியை பார்த்து இன்பதிர்ச்சி அடைந்த சிபி!

  அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் கண்ணன் - ஐஸ்வர்யாவை மொத்த குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டதில் இருந்து கதையில் எந்த திருப்பங்களும், சுவாரசியங்களும் அரங்கேறுவது இல்லை. இதனால் இயக்குனர் மீனாவின் அப்பா மூலம் வீட்டுக்குள் பிரச்சனை கொண்டு வர பிளான் செய்து விட்டார். கயல் பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இன்று களைக்கட்ட, வீட்டுக்கு வரும் மீனாவின் அப்பா, குழந்தை, மருமகன் ஜீவா, மகள் மீனாவை கோயிலுக்கு அழைத்து செல்கிறார்.

  அங்கு போய் , மீண்டும் கண்ணனை சேர்த்து கொண்ட விஷயத்தை பற்றி பேசுகிறார். இந்த சின்ன வீட்டில் 8 பேர் எப்படி இருக்க முடியும்? பாத்ரூம்மை எப்படி யூஸ் பண்ண முடியும்? குழந்தைக்கு இது நல்லது இல்லை என கொளுத்தி போடுகிறார். மீனாவின் வீக்னஸே பாத்ரூம் மேட்டர் தான். வந்த நாள் முதல் மீனா அடிக்கடி பாத்ரூம், பெட்ரூமுக்கு தான் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். இது அவரின் அப்பாவுக்கு நன்கு தெரியும் என்பதால் அதை வைத்தே மீனாவை கோபப்படுத்துகிறார்.

  ரசிகர்களுக்கு அருண் விஜய் கொடுக்க போகும் ட்ரீட் யானை டீசர்!

  இதன் வெளிப்பாடு வீட்டுக்கு போன பின்பு மீனா நடந்து கொள்வதில் இருக்கிறது. ஆக இந்த வார சீரியல் டி.ஆர்.பியை சரிசெய்ய இயக்குனர் பாத்ரூம், பிரச்சனையை கையில் எடுத்து இருப்பது உறுதியாகிவிட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி