• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விஜய் டிவி சீரியல் பிரபலமான கம்பம் மீனா வீட்டில் நடந்த விசேஷம்... ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி சீரியல் பிரபலமான கம்பம் மீனா வீட்டில் நடந்த விசேஷம்... ரசிகர்கள் வாழ்த்து!

கம்பம் மீனா

கம்பம் மீனா

நடிகை கம்பம் மீனாவின் இல்ல திருமணம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் நடைபெற்றது.‌

  • Share this:
ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல ஹிட் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இரண்டும் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளன. இந்த 2 சீரியல்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை கம்பம் மீனா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி என்ற கேரக்டரிலும், பாக்கியலட்சுமி சீரியலில் நாயகி பாக்கியாவின் வீட்டு பணி பெண்ணாக செல்வி என்ற கேரக்டரிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். மேலும் இவர் தேன்மொழி பிஏ சீரியலில் பவானி என்ற கேரக்டரிலும் தோன்றி உள்ளார்.

இவர் முதன்முதலாக பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். சினிமா வாய்ப்புகளை நோக்கி சென்ற இவர் அதன் பின்னர் சிலம்பாட்டம் படத்தில் தலை காட்டினார். தொடர்ந்து 2012-ல் டூயட் மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த மயிலு என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி, பிரபல டைரக்டர் மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன், கடல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ராவணன் ஹிந்தி ரீமேக்கிலும் நடிகை கம்பம் மீனா நடித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிமாறன் & தனுஷ் கூட்டணியின் பிளாக் பாஸ்டர் படங்களில் ஒன்றான அசுரனிலும் இவர் நடித்திருக்கிறார். ஆனால் இவர் நடித்த காட்சிகள் அனைத்துமே கட் செய்யப்பட்டு விட்டன. நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி, சகுனி உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 70 படங்களில் நடித்திருக்கிறார் கம்பம் மீனா. தவிர சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின் மருமகளாக வெள்ளித்திரையில் வெளியான இரட்டை சுழி படத்திலும் நடிகை கம்பம் மீனா நடித்திருக்கிறார். எனினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் சீரியலில் வரும் சீன்களில் சுவாரசியம் இருக்கும். வித்தியாசமான குரல்வளம் மற்றும் நகைச்சுவையான பேச்சு மற்றும் பாவனை ஆகியவற்றால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நடிகை கம்பம் மீனா தற்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
Also read... ரோஜா சீரியலில் களமிறங்கிய பிரபல நடிகை - டி.ஆர்.பி-ஐ எகிற வைக்க சூப்பர் ப்ளான்!

காரணம் அவரது மகனுக்கு மிக சமீபத்தில் திருமணம் நடந்தேறியது. இது தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். பல ரசிகர்கள் அவருக்கு திருமண வயதில் இவ்வளவு பெரிய மகன் இருப்பார் என எதிர்பார்க்கவில்லை என ஆச்சர்யம் தெரிவித்து உள்ளனர். இன்னும் சிலர் பாக்கியலட்சுமியில் அவர் அடிக்கடி பேசும் வசனமான "யக்கா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.!"என்று அவருக்கு திருமண வயதில் மகன் இருப்பதை கண்டு கமெண்ட் செய்துள்ளனர். புது மண தம்பதிகளான சூரிய பிரகாஷ் - சிவ ரஞ்சனிக்கு நடிகை கம்பம் மீனாவின் ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை கூறி உள்ளனர். நடிகை கம்பம் மீனாவின் இல்ல திருமணம் அவரது சொந்த ஊரான கம்பத்தில் நடைபெற்றது.‌ இதில் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடிக்கும் திவ்யா பங்கேற்று கம்பம் மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: