ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சண்டையை ஆரம்பித்த ஐஸ்வர்யா - மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடா இது?

சண்டையை ஆரம்பித்த ஐஸ்வர்யா - மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடா இது?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மிஸ் செய்யாமல் பார்க்கவே தனி கூட்டம் இருந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யா - மீனா போடும் சண்டையால் வீடு ரெண்டாகிறது. இதைப் பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடா? என்ற சந்தேகமும் வருகிறது.

  வர வர விஜய் டிவி சீரியல்களுக்கு என்ன ஆனது என தெரியவில்லை. இவ்வளவு ஆண்டுகளாக கொடி கட்டி பறந்து கொண்டிருந்த சீரியல்களின் டி.ஆர்.பி பாதாளத்திற்கு தள்ளப்பட்டுவிட்டன. அதிலும் குறிப்பாக பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழானது போல தெரிகிறது. சீரியல்களின் புரமோவில் இடம்பெறும் கருத்துக்கள் மூலம் இந்த நிலையை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. திரைக்கதையில் சுவாரசியம் இல்லை, அதே கான்ஸ்செப்ட், அதே கரு இப்படியே எத்தனை ஆண்டுகளுக்கு தான் இதே டெம்ப்லேட்டை பயன்படுத்த போகிறீர்கள்? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

  அப்படி என்ன வேண்டுதல்? வருங்கால மனைவியுடன் முருகன் கோயிலில் சீரியல் நடிகர்!

  இதை உறுதி செய்வது போல தான் உள்ளது சீரியலின் கதைக்களமும். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை மிஸ் செய்யாமல் பார்க்கவே தனி கூட்டம் இருந்தது. ஆனால் இப்போது சீரியலில் எந்த விறுவிறுப்பும் இல்லாததால் ரசிகர்கள் போர் அடிப்பது போல், உணர்கின்றனர். இன்றைய எபிசோடில் கூட சொல்லும்படியான கதை எதுவும் இல்லை. நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக, கடைசியில் ஆட்டோவை பொறுமையாக ஓட்டிக்கொண்டே கதிர் வீடு வந்து சேர்கிறார். பத்திரமாக முல்லை, தனத்தை ஆட்டோவில் இருந்து இறக்குகிறார். 5 லட்சம் செலவு செய்யும் ட்ரீட்மெண்ட் முல்லைக்கு தொடங்கியது.

  உழைப்புக்கு கிடைத்த வெற்றி… பிரபல விஜய்டிவி சீரியல் நடிகருக்கு தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு!

  அதன் பின்பு, வழக்கம் போல் ஐஸ்வர்யா மீனா சண்டை தொடங்குகிறது. ஐஸ்வர்யா பாட்டு கேட்க, மீனா சவுண்ட் அதிகமாக இருப்பதாக கூற, அது பாட்டு இல்லை வீடியோ என ஐஸ்வர்யா சண்டைக்கு போகிறார். பதிலுக்கு மீனாவும் பேச, கண்ணனும், தனம் அண்ணியும் இருவரையும் சமாதானம் செய்கிறார்கள். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு கடைசியில் ஐஸ்வயாவும் மீனாவும் நாங்கள் சண்டையே போடவில்லை என்கிறனர். ஒரு நிமிஷத்தில் சீரியலை பார்க்கும் நமக்கே இது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு தானா? என்ற குழப்பம் வந்து விடுகிறது.

  அவ்வளவு தான் வீட்டுக்கு வரும் மூர்த்தியும், ஜீவாவும் முல்லையை பார்த்து விசாரிக்கிறனர். இரவு ஆகுகிறது. முல்லை பாத்ரூம் போக கதிர், மனைவியை அப்படியே தூக்கி செல்கிறார்,. இதோடு சீரியலும் முடிகிறது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv