Home /News /entertainment /

4 வருட உழைப்பு.. அளவில்லா சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு!

4 வருட உழைப்பு.. அளவில்லா சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த 4 வருட உழைப்பின் வெற்றி  தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 1000 வது எபிசோடு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வெற்றிக்கரமாக 1000 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தை சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

    அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவத்தை சொல்லும் சீரியலாக விஜய் டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிப்பரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கிட்டத்தட்ட ஆனந்தம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்றாலும் இந்த சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் ஏராளம்.குறிப்பாக கிராமப்புறங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு தனி ஃபேன் பேஸ் இன்னமும் உண்டு. இந்த சீரியலில் நடிக்கும் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட், குமரன், ஹேமா ராஜ்குமார் ஆகியோரின் நிஜப்பெயர்கள் கூட பலருக்கும் தெரியாது. அவர்களை மூர்த்தியாக தனமாக கதிராக ஜீவாவாக கொண்டாடி அதுதான் அவர்களின் நிஜப் பெயர்கள் என்ற அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

    அநீதி கண்டு பொங்கி எழும் கண்ணம்மா.. இந்த முறையும் பாரதி அவுட்!

    மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவும் இதில் முக்கிய அங்கம் . அவருக்கு சின்னத்திரையில் மிகப் பெரிய ரீச்சை வாங்கி தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். அவரின் மறைவு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் இல்லாமல் சீரியல் 2 வருடத்தை கடந்து விட்டது. அவர் ரோலில் இப்போது காவ்யா அறிவுமணி முல்லையாக நடித்து வருகிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 1000 எபிசோடை வெற்றிக்கரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தை சீரியல் குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சீரியல் இயக்குனர், கேமரா மேன், நடிகர், நடிகைகள், தொழில் நுடப் கலைஞர்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி மகிழ்ந்துள்ளனர். இந்த 4 வருட உழைப்பின் வெற்றி  தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 1000 வது எபிசோடு.



     




    View this post on Instagram





     

    A post shared by Stalinmuthu (@stalinmuthu27)






    அதே போல் இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தி ரோலில் நடிக்கும் ஸ்டாலின் முத்து தனது இன்ஸ்டாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000 வது எபிசோடு ஸ்பெஷல் தருணத்தை வித்தியசமான ரீலீஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி