குடும்ப பாங்கான சீரியல்களை மக்கள் எப்போதும் விரும்பி பார்ப்பார்கள். இந்த ஒன்லைனை வைத்து தான் இன்று ஒட்டு மொத்த சின்னத்திரை சீரியல்களும் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது..இந்த வகையான சீரியல்களின் டாப் இடத்தில் ஏராளமான விஜய் டிவி சீரியல்கள் உள்ளன. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பலர் விரும்பி பார்ப்பார்கள். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது.பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள எல்லா கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இது இருந்து வருகிறது.
இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் பற்றி அறிமுகவே தேவையில்லை. ரசிகர்கள் இவரை சின்னத்திரை தளபதி என்றும் செல்லமாக அழைப்பார்கள். ஆனால் குமரன் அதை விரும்புவது இல்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் இவரின் சிறப்பான நடிப்பையும், சாந்தமான கதாபாத்திரத்தையும் பலர் விரும்புவார்கள். குறிப்பாக இளம் வயதினருக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவர் ஒரு சிறந்த நடன கலைஞராவார். இதற்கு முன்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதே போன்று பல தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க.. பிரபல வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்கியவர்கள் கவனத்திற்கு! வட்டியில் முக்கிய மாற்றம்
தற்போது சீரியல்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் குமரனை ரசிகர்கள் கூடிய விரைவில் வெப் சீரிஸிலும் பார்க்க போகிறார்கள். குமரனின் நடிப்பு திறமைக்கும், நடன திறமைக்கும் தீனி போடும் அளவுக்கு ஒரு கதை அமைந்துள்ளது. அதில் தான் அடுத்ததாக குமரன் நடிக்க போகிறார். இதற்கான பூஜை நேற்றைய தினம் நடைப்பெற்றது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. குறிப்பாக குமரன் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர்.
குமரன் மட்டுமில்லை, இந்த சீரிஸில் பல சின்னத்திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். திருமதி ஹிட்லர் புகழ் அமித், கயல் சீரியல் சைத்ரா ரெட்டி, என பல சின்னத்திரை பிரபலங்கள் இந்த
சீரிஸில் இணைகின்றனர். ‘புல்லட் புரபோசல்’ என்பது இந்த வெப் சீரிஸின் பெயர் ஆகும். இதில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்க போவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படிங்க.. 12 வருடங்களுக்கு முன்பு காரைக்குடி மாடியில்… சன் டிவி நாதஸ்வரம் சீரியல் நடிகையின் நெகிழ்ச்சி பதிவு!
ஆனால் அந்த தகவல் தற்போது வரை உறுதிசெய்யப்படவில்லை. சொல்லப்போனால் 2022ம் ஆண்டு சைத்ரா ரெட்டிக்கு நல்ல தொடக்கமாக அமைந்து இருக்கிறது. கயல் சீரியலின் வெற்றி, அஜித்துடன் வலிமை, இப்போது வெப் சீரிஸ்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.