முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா முல்லை? புது வரவு இவரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா முல்லை? புது வரவு இவரா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு சின்னத்திரை நடிகையை நடிக்க இருப்பதாக அந்த சீரியல் குழு முடிவெடுத்தது. அதன்படி, காவ்யா அறிவுமணி என்பவர் இதற்கு தேர்வு செய்யப்பட்டு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

குடும்ப பாங்கான சீரியல்கள் பல இருந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே மக்கள் விரும்பி பார்ப்பார்கள். எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும் அவற்றில் சில சீரியல்கள் மட்டுமே மக்களை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கும். அப்படிப்பட்ட சீரியல்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பது தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக  மாறி விட்டது.

அதே போன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், இந்த சீரியலில் 'முல்லை' கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் விருப்பமான ஒன்றாக இருந்து வந்தது. முதலில் வி.ஜே. சித்ரா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவரின் குடும்ப பாங்கான நடிப்பிற்கும், துடிப்பான பேச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளம் தற்போது வரையில் உள்ளது.

இதையும் படிங்க.. பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகும் தமிழ் படங்கள்!

சென்ற ஆண்டு இவர் மறைந்து விட்டதால், முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒரு சின்னத்திரை நடிகையை நடிக்க இருப்பதாக அந்த சீரியல் குழு முடிவெடுத்தது. அதன்படி, காவ்யா அறிவுமணி என்பவர் இதற்கு தேர்வு செய்யப்பட்டு முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் சில முக்கிய சீரியல்களில் இருந்து சில நடிகைகள் மற்றும் நடிகர்கள் சினிமா பட வாய்ப்பு மற்றும் வேறு சில காரணங்களால் விலகி வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபத்திரத்தில் தற்போது நடித்து வரும் காவ்யா அறிவுமணி அதில் இருந்து விலக போவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியானது. அவருக்கு பதிலாக அபிநயா என்பவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அது உண்மை இல்லை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க.. விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ஹ்ரித்திக் ரோஷன்... என்ன கதாபாத்திரம் தெரியுமா?

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து காவ்யா விலகவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பிறகு யார் இந்த அபிநயா என்று கேட்கிறீர்களா?, இவர் முல்லையின் தோழி கதாபாத்திரத்தில் புதிதாக நடிக்க வந்துள்ளார் என்று அறியப்படுகிறது. ஏற்கனவே முல்லையாக நடித்த சித்ரா மறைந்த பிறகு, அந்த கதாபாத்திரத்திற்கான வரவேற்பு பெருமளவு குறைந்தவண்ணம் உள்ளது.
 
View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)மேலும் தற்போது நடித்து வரும் காவ்யாவையும் மாற்றி விட்டால், அவ்வளவு தான்! மக்கள் நொந்து போய் விடுவார்கள். சீரியல்களில் நாம் பார்க்கும் கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டால், அவருக்கு பதிலாக வரும் வேறு ஒரு நபரை அவ்வளவு எளிதில் மக்களால் ஏற்று கொள்ள முடியாது. அதுவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற மிக பிரபலமான சீரியல்களில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் மாறினால் டி.ஆர்.பி குறைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதே போன்று பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்தும் சில முக்கியமானவர்கள் விலகினார்கள். இது மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv