புதிய எபிசோட் எப்போது வரும்? பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் பதில்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய எபிசோட் எப்போது ஒளிபரப்பாகும் என்று அத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் மனம் திறந்துள்ளனர்.

புதிய எபிசோட் எப்போது வரும்? பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்கள் பதில்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பழைய எபிசோட்களை பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து புதிய எபிசோட்கள் படமாக்கப்பட்டன.

இதையடுத்து ஜூன் 17-ம் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புதிய எபிசோட் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனிடையே ஜூன் 19-ம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படப்பிடிப்பு பணிக்ள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இன்று முதல் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கும் சுஜிதா, குமரன் ஆகியோர் ஏற்கெனவே ஒரு வாரத்துக்கும் அதிகமாக படப்பிடிப்பு நடந்து முடிந்திருப்பதாகவும், மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் இந்த மாதத்தில் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும். இந்த மாதத்தில் வரும் திங்கள் கிழமை அல்லது ஏதாவது ஒரு நாளிலிருந்து புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும்” என்று தெரிவித்தனர்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading