பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோடின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு - ரசிகர்கள் குஷி

ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் புதிய எபிசோட் ஒளிபரப்பு தேதியை விஜய் டிவி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோடின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு - ரசிகர்கள் குஷி
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ்
  • Share this:
கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பழைய எபிசோட்களை பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வந்தன. இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு. அதைத்தொடர்ந்து தற்போது புதிய எபிசோட்கள் படமாக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் படமாக்கப்பட்டு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் வரும் புதன் கிழமை இரவு 8 மணி முதல் புதிய எபிசோட் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுகுறித்த விஜய் டிவியின் ட்விட்டர் பதிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா, “மீண்டும் உங்களை சந்திக்க வருகிறோம். மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



மேலும் படிக்க: விஜய், சூர்யாவுக்கு பாதுகாவலராக இருந்தவர் மரணம் - நடிகர்கள் இரங்கல்

படிக்க: மீண்டும் ‘வாலு’ பட இயக்குநர் உடன் கரம் கோர்க்கும் சிம்பு
First published: June 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading