• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அப்படி என்ன செய்தார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி? செம்ம கோபத்தில் விஜே சித்து ரசிகர்கள்!

அப்படி என்ன செய்தார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி? செம்ம கோபத்தில் விஜே சித்து ரசிகர்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

விஜே சித்து குறித்து நீங்கள் பேசவில்லை, அவரை மறந்துவிட்டீர்களா? என கேள்வி கேட்டுள்ளனர்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ரோலில் நடிக்கும் ஸ்டாலின் போட்ட இன்ஸ்டா பதிவு மறைந்த விஜே சித்து ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    சின்னத்திரை ரசிகர்களால் சூப்பர் ஹிட் சீரியலாக ஓடி கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. கடந்த 2 வாரங்களாக இந்த சீரியல் டி.ஆர்.பியில் டாப் லிஸ்டில் உள்ளது. அதற்கு காரணம் லட்சுமி அம்மா மறைவு மற்றும் கண்ணன் ஐஸ்வர்யா எபிசோடுகள் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சகோதர்கள் நால்வருக்கும் தாயாக, லட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் உடல் நலக் குறைவால் இறந்தது போல் சீரியல் கதை பயணித்தது.

    கடைக்குட்டி கண்ணன் யாரிடமும் சொல்லாமல் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டதால் அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த எபிசோடுகள் ஒளிப்பரப்பான நாளில் இருந்து டி.ஆர்.பியில் எகிற ஆரம்பித்தது. சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமே அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பம் இணையதளத்தில் தங்களது நன்றியை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்த சீரியலில் மூத்த அண்ணனாக  சத்தியமூர்த்தி ரோலில் நடிக்கும் ஸ்டாலின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி கூறி கூடவே ஒரு முக்கியமான தகவலையும் ஷேர் செய்திருந்தார். அது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.




    அவர் வெளியிட்ட பதிவில், இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்று ஆண்டுகள் நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தொடரை வெற்றியடைய முதற்முழு காரணமாகிய ரசிகர்களாகிய உங்களுக்கும் மனமார்ந்தநன்றிகள் . உங்கள் ஆதரவுகளோடு தொடர்ந்து பயணிக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார். இதில் மறைந்த விஜே சித்து குறித்து அவர் எங்கும் குறிப்பிடவில்லை அவர் பதிவிட்ட ஃபோட்டோவிலும் முல்லையாக நடிக்கும் காவ்யா புகைப்படம் தான் இருந்தது. இதனால் விஜே சித்து ரசிகர்கள் கோபத்தில் கமெண்டுகளை பதிவு செய்தனர். அதில் ஏன், விஜே சித்து குறித்து நீங்கள் பேசவில்லை, அவரை மறந்துவிட்டீர்களா? என கேள்வி கேட்டிருந்தனர். இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் மூர்த்தி மற்றொரு பதிவையும் தற்போது வெளியிட்டுள்ளார்.




    அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மறைந்த கலைஞர்கள் புகைப்படத்தை பதிவு செய்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில் விஜே சித்து புகைப்படம் இடம்பெற்றுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: