• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முல்லை மனசு யாருக்கு வரும்! ரோட்டில் நிற்கும் கண்ணன் -ஐஸ்வர்யாவுக்கு யாரு வழியா உதவி பண்றாங்க பாருங்க!

முல்லை மனசு யாருக்கு வரும்! ரோட்டில் நிற்கும் கண்ணன் -ஐஸ்வர்யாவுக்கு யாரு வழியா உதவி பண்றாங்க பாருங்க!

பாண்டியன் ஸ்டோர்ஸ் புரமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் புரமோ

3 அண்ணன்கள் இருந்தும் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு ரோட்டில் நிற்கிறான்.

  • Share this:
    இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலான பாண்டியன் ஸ்டோரில் முல்லை அண்ணி, கண்ணனுக்கு உதவும் நெகிழ்ச்சியான தருணம் புரமோவாக வெளியாகியுள்ளது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் இந்த வாரம் டி.ஆர்.பியில் முதல் இடத்தில் இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். ரசிகர்களிம் உள்ளம் கவர்ந்த தொடரான இந்த சீரியல் பல வருடங்களாக தொடர்ந்து ஹிட்டில் சென்று கொண்டிருக்கிறது. முல்லையாக நடித்த சித்ராவின் மறைவுக்கு பிறகு வேறு பாதையில் சீரியல் நகர தொடங்கியது. இருப்பினும் ரசிகர்கள் எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. மற்ற எல்லா சீரியல்களையும் ஓரங்கட்டி தொடர்ந்து வெற்றிக்கரமாக பயணித்து கொண்டிருக்கிறது.

    கடந்த வாரம் முழுவது மூர்த்தியின் சின்ன தம்பினான கண்ணன் ஐஸ்வர்யா திருமணம் என பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்த தொடர் தற்போது செண்டிமெண்ட் பாணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. கண்ணனின் திருமணத்தை சற்றும் எதிர்பாராத மூர்த்தி இருவரையும் வீட்டை விட்டு துரத்துகிறார். கண்ணனுக்கு இனி வீட்டில் இடமில்லை எனவும் தலை மூழ்கினார். 3 அண்ணன்கள் இருந்தும் கண்ணன் ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு ரோட்டில் நிற்கிறான். தங்க வீடு இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் கண்ணனும் - ஐஸ்வர்யாவும் ரோட்டில் அலைவது சீரியல் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது. பெற்றோர் அனுமதி இல்லாமல் இளம் தலைமுறையினர் செய்யும் தவறை அதனால் அவர்கள் விளைவிக்கும் பிரச்சனையை கண்ணன் - ஐஸ்வர்யா வழியாக இயக்குனர் காட்டி வருகிறார்.

    also read... ஆங்கராக தொடங்கிய பயணம்... விஜய் டிவியில் தொடர்ந்து பவித்ராவுக்கு லீட் ரோல் தர நிஜ காரணம்!

    நேற்றைய தினம் கஸ்தூரி அத்தை வீட்டுக்கு சென்று திட்டி வாங்கி கொண்ட வந்த கண்ணன் ஐஸ்வர்யா யார் தயவும் இன்றி ரோட்டில் நிற்கின்றனர். இதை கதிரும்- மூர்த்தியும் பைக்கில் செல்லும் போது பார்க்கின்றனர். ஆனாலும் கண்ணன் மீது இருக்கும் கோபத்தால் அவனை கண்டுக்கொள்ளாமல் அங்கிருந்து செல்கின்றனர். இதற்கிடையில் எப்படி முல்லை அண்ணிக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது என தெரியவில்லை.



    உடனே, மனசு கேட்காமல் தனது அப்பாவுக்கு ஃபோன் செய்து அவர் வழியாகவே அவர்களுக்கு உதவி செய்கிறார். முல்லையின் அப்பா, கண்ணன் - ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து செல்கிறார். முல்லை வேண்டி கேட்க, அவர்களுக்கு சாப்பாடும் போட்டு தங்க வைக்கிறார். உண்மையில் முல்லை மனசு தங்கம் தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: