ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பிரச்சனைக்கு உதவ போவது யார் தெரியுமா? ரசிகர்களின் கணிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை பிரச்சனைக்கு உதவ போவது யார் தெரியுமா? ரசிகர்களின் கணிப்பு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

முல்லைக்கு உதவும் வாடகை தாய் போல் வேறு ஒரு கதாபாத்திரம் காட்டப்படும், ஏன் சமீபத்தில் சீரியலில் தோன்றிய முல்லையின் பள்ளி தோழியாக கூட இருக்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் பிரச்சனைக்கு உதவ போவது யார்? என்ற கேள்விக்கு ரசிகர்கள் ஒருவிதமான பதிலை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாரம் வாரம் ஏதாவது ட்விஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் தெளிவாக இருப்பார். எபிசோடுகளை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். திங்கட்கிழமை வீட்டில் ஒரு பிரச்சனை வெடிக்கும். அந்த வாரம் முழுவதும் அதுக் குறித்த காட்சிகள் அரங்கேறும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இதைப்பற்றியே பேசுவார்கள். கடைசியில் தனம் அண்னி அல்லது மூர்த்தி இறங்கி வந்து சண்டையை முடித்து விடுவார்கள். அவ்வளவு பில்டப் கொடுக்கப்பட்ட சண்டை புஸ்ன்னு முடிந்து விடும். வழக்கம் போல் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இரவு சாப்பாட்டை சாப்பிடுவார்கள். இப்படிதான் இத்தனை வருடங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வார திங்கட்கிழமையும் அப்படி தான் தொடங்கியது. ஐஸ்வர்யாவும் மீனாவும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டார்கள். இதனால் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கும் என நினைக்கையில் ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். வழக்கம் போல் எல்லோரும் அப்பளத்தை வைத்து கொண்டு சாப்பாடு சாப்பிட தொடங்கிவிட்டார்கள். இது ஒருபுறம் இருக்க சமீப காலமாக கதிர் மற்றும் முல்லை காட்சிகளுக்கு தொடர்ந்து சீரியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.. 2 நிமிடத்தில் சூப்பரான சைடிஷ் ரெடி.. செஃப் தாமு சொல்லி தரும் சமையல் ரகசியம்!

அதாவது, முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் அது நடந்த பாடில்லை. சொந்தக்காரர்கள் அனைவரும் இதைப்பற்றி கேட்க ஆரம்பித்து விட்டனர். அதனால் முல்லைக்கு பயம் வந்து விட்டது. இதனால் தனம் இருவரையும் ஆஸ்பிட்டல் போய் செக்கப் செய்ய சொல்கிறார். இருவரும் செல்கிறார்கள். மறுநாள் ரிசல்ட் வருகிறது. முல்லைக்கு தான் பிரச்சனை என்று டாக்டர் சொல்லி விடுகிறார். ஆனால் இதை முல்லையிடம் சொல்லாமல் கதிர் மறைத்து விடுகிறார்.

இதையும் படிங்க.. ஏன் இப்படி செஞ்சீங்க? பிக் பாஸ் பாவ்னியை கேள்வி கேட்கும் ரசிகர்கள்!

இயற்கையான முறையில் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்பதால், அடுத்ததை பற்றி பிறகு யோசிக்கலாம் என்றார் டாக்டர். இப்போது சீரியலில் அடுத்தக்கட்டம் பற்றி ரசிகர்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். அதில் சிலர், வாடகை தாய் மூலம் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாக டாக்டர் கூறுவார். ஐஸ்வர்யா தான் முல்லைக்கு உதவி செய்து வாடகை தாயாக இருப்பார் அப்போது தான் மொத்த குடும்பமும் முழு சந்தோஷத்துடன் ஐஸ்வர்யாவை ஏற்றுக் கொள்வார்கள் என்று ஒரு சில ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

வேறு சிலர், முல்லைக்கு உதவும் வாடகை தாய் போல் வேறு ஒரு கதாபாத்திரம் காட்டப்படும், ஏன் சமீபத்தில் சீரியலில் தோன்றிய முல்லையின் பள்ளி தோழியாக கூட இருக்கலாம். இவர்களை வைத்து சில எபிசோடுகளை இயக்குனர் ஓட்டலாம் என்கின்றனர். உண்மையில் அடுத்தக்கட்டம் என்ன? என்பது இயக்குனருக்கு மட்டும் தான் தெரியும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv