விஜய் பட வாய்ப்பையே விட்டவர்..கைக்கொடுத்த முல்லை ரோல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா ஸ்பெஷல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா

தளபதி விஜய்யின் பிகில் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

 • Share this:
  சின்னத்திரை நட்சத்திரங்கள் பலருக்கும் வெள்ளித்திரை தான் கனவே ஆனால், சீரியலுக்காக வெள்ளித்திரையில் விஜய் பட வாய்ப்பையே மிஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதை தெரியுமா?

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்துவின் மறைவுக்கு பின்பு அந்த ரோலில் பாரதி கண்ணம்மா அறிவு நடித்து வருகிறார். இவரின் நிஜப்பெயர் காவியா அறிவுமணி அதனால் தனது முதல் சீரியலிலே சொந்த பெயரில் நடிக்க தொடங்கினார். இன்று முல்லையாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களால் முழுதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இந்த குறுகிய காலத்தில் முல்லை ரோலை அழகாக புரிந்து கொண்டு எந்தவித எதிர்மறையான விமர்சனங்களையும் பெறாமல் காவியா கலக்கி வருவது பாராட்டக்குரிய விஷயம் தான். பின்ன சும்மாவா நயன்தாராவை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு சினிமாவில் நுழைந்தவர் ஆச்சே.

  காவியா பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். படிப்போ ஆர்க்கிடெக்ட் ஆனால் பிடித்ததோ சினிமா. அதன் மீது கொண்ட தீராத ஆசை மற்றும் நயன்தாராவை மிகவும் பிடிக்கும் என்பதால் அவரை போலவே ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு தனது கெரியரை தொடங்கினார். அதிலும் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டுள்ளார். முதலில் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நல்ல பெயரை வாங்கி தந்தது. அப்போது தான் தளபதி விஜய்யின் பிகில் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த நேரம் பார்த்து பாரதி கண்ணம்மா சூட்டிங்கில் இருந்தும் அழைப்பு வர இதுவா? அதுவா? என யோசித்தவர் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தினம் தினம் அந்த வாய்ப்பை மிஸ் பண்ணதை நினைச்சி காவியா ஃபீல் செய்தாத நாளே இல்லையாம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சீரியலுக்கு முன்பு காவ்யா நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை டிக் டாக்கில் படு பிஸி. பாண்டியன் ஸ்டோரில் முல்லை ரோல் மிக மிக முக்கியமான ஒன்று. அதிலும் கதிர் - முல்லை ஜோடிக்களுக்கு தனியாக ஃபேன்ஸ் பட்டாளமே உண்டு. இந்நிலையில் தான் சித்துவின் மறைவுக்கு பிறகு இயக்குனர் காவியாவை நம்பி அந்த ரோலை கொடுத்தார். இந்நாள் வரை தனது கடினமான உழைப்பால் வெயிட் லாஸ் எல்லாம் செய்து முல்லை ரோலில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் காவியா.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  kaavya⭐ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kaavyaarivumanioffl)


  சேலை, சுடிதார், எத்னிக், மார்டன் என எல்லா ட்ரெஸிலும் காவியா ஃபோட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாவில் படங்களை வெளியிடுவது வழக்கம். அண்மையில் நெற்றிக்கண் நயன்தாரா போல் அவர் செய்த ரீல்ஸ் மிகப் பெரிய ஹிட். வெள்ளித்திரையிலும் காவியாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. நல்ல திரைக்கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: