முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு குட் பை சொல்லும் முல்லை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு குட் பை சொல்லும் முல்லை?

காவ்யா அறிவுமணி

காவ்யா அறிவுமணி

இன்ஸ்டாகிராமில் காவ்யா வெளியிட்ட வித விதமான படங்களைப் பார்த்து அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.

  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி விடுவேன் என முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் முக்கியமானது. இந்த சீரியல் தெலுங்கில் ‘வடிநம்மா’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்றும் ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஹிட்டுக்கு கதிர் - முல்லை ஜோடியின் ரொமான்ஸ் தான். இதில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா, கடந்த ஆண்டு சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதற்கடுத்து முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் காவ்யா அறிவுமணி. முதலில் ரசிகர்கள் அவரை அவ்வளவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், போகப்போக வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு காவ்யா அறிவுமணி விலகுவதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள் காவ்யா அறிவுமணி, இன்ஸ்டாகிராமில் வித விதமான படங்களைப் பார்த்து அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அந்த சீரியலில் நடிக்கும் போது அவரது அப்பாவிற்கு பிடிக்காமல் இருந்ததாம், ஆனால் அவருடைய அம்மாவின் துணையில் தான் நடிக்க தொடங்கினாராம்.

பாரதி கண்ணம்மாவுக்கு முன்பே சீரியல் வாய்ப்பு வந்த போதும் ஏற்காமல் இருந்த காவ்யா, இயக்குநர் பிரவீனுக்காக அந்த சீரியலை ஒப்புக் கொண்டாராம். பின்னர் சித்ரா இறந்த பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க - வீல் சேரில் விஜய் டிவி டிடி... கவலையில் ரசிகர்கள்

முல்லை கதாபாத்திரத்தில் இருந்து விலகுவதாக வந்த வதந்தி குறித்த கேள்விக்கு பதிலளித்த காவ்யா, “நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செட் ஆகி விட்டேன். ஆனால் பெரிய வாய்ப்பு வந்தால் அந்த சீரியலில் இருந்து விலகிவிடுவேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: TV Serial, Vijay tv