முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. நன்றியுடன் புறப்பட்டார்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. நன்றியுடன் புறப்பட்டார்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

”பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி நாள் ஷூட்டிங். முல்லையாக கடைசி நாள்”

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து முல்லையாக நடித்த நடிகை  காவ்யா விலகியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் காவ்யா.

கடந்த 2 வருடமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்தவர் நடிகை காவ்யா அறிவுமணி. இவர் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் சின்னத்திரையில் முதன் முதலாக அறிமுகம் ஆனார். அதில் அறிவு என்ற ரோலில் நடித்து இருந்தார். விஜே சித்ரா தற்கொலைக்கு பிறகு அடுத்த முல்லை யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக அறிமுகம் ஆனார் காவ்யா. ஏற்கெனவே சித்ரா - குமரன் ஜோடிக்கு பயங்கர ரசிகர்கள் கூட்டம் இருந்தது. வந்த கொஞ்ச நாளிலே அந்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார் காவ்யா.

''பிரைவேட் பார்ட்டுக்கு மார்க் போடச் சொன்னார்'' - பிக்பாஸ் பங்கேற்பாளர் குறித்து நடிகை பரபர புகார்!

குமரன் - காவ்யா ஜோடியும் ஹிட் அடித்தது. காவ்யாவுக்கும் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது. முல்லையாக ரசிகர்கள் காவ்யாவை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் திடீரென்று இந்த சீரியலில் இருந்து காவ்யா விலகினார் என்ற தகவல்  கடந்த மாதம் இணையத்தில் பரவியது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார். ஆனால் எந்த காரணத்தினால் முல்லை சீரியலில் இருந்து விலகினார் என்ற தகவல் வெளியாகவில்லை.




 




View this post on Instagram





 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)



இந்நிலையில் சீரியலில் இருந்து விலகியதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் காவ்யா. இதுக்குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார். அதில் ”பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைசி நாள் ஷூட்டிங். முல்லையாக கடைசி நாள் 14.09.2022. இந்த அழகான பயணத்திற்கு நன்றி”  என அதில் குறிப்பிட்டுள்ளார்.  இதனால் மறுபடியும் அடுத்த முல்லை யார்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே  போல் காவ்யா விலகலுக்கான காரணமும் தெரியவில்லை. ரசிகர்கள் பலரும் காவ்யாவுக்கு வாழ்த்துக்களை கூறி ”உங்களை கண்டிப்பாக சீரியலில் மிஸ் செய்வோம்” எனவும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv