பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் ரோலில் நடிக்கும் சரவணன விக்ரம் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுஜிதா மற்றும் குமரனின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே சம்பாதித்து வைத்து இருக்கிறார்கள். இவர்களின் சமூகவலைத்தளப்பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபோலோ செய்கின்றனர்.
அந்த வார்த்தை சொன்ன தாமரை.. கடுப்பானாரா ஆங்கர் பிரியங்கா? கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!
அந்த வகையில் கடைக்குட்டி தம்பி , கண்ணன் ரோலில் நடிக்கும் சரவண விக்ரமுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகாவுடன் இப்போது ஷார்ட் பிலிம்கள், ஆல்பம் சாங்குகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். சீரியலை பொறுத்தவரையில் தற்போது கண்ணன் - ஐஸ்வர்யாவை மொத்த குடும்பமும் மன்னித்து ஏற்றுக் கொண்டனர். கண்ணன் இறுதியாண்டு காலேஜில் படிக்கிறார், அவருக்காக மூர்த்தி கடையில் ஐஸ்வர்யா வேலை செய்கிறார். இந்த ட்ராக்கில் தான் தற்போது சீரியல் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.
சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்
சில மாதங்களுக்கு முன்பு சீரியலில் லட்சுமி அம்மாவாக நடிக்க ஷீலா இறப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டன. அந்த சீனில் நிஜமாகவே முடியை எடுத்து நடிப்பில் பட்டையை கிளப்பி இருந்தார் சரவணன விக்ரம். அதன் பிறகு தான் இவருக்கு ஃபேன்ஸ் கூட்டம் அதிகமானது. இந்நிலையில்
சரவணன விக்ரம் தங்கைக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை சரவணன விக்ரம், தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அதுமட்டுமில்லை இந்த ஃபங்கஷனுக்கு சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதா, கதிராக நடிக்கும் குமரனும் வந்துள்ளனர். இவர்களின் புகைப்படத்தையும் சரவணன விக்ரம் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கண்ணனின் தங்கைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.