ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நிஜ முகத்தை காட்டிய மீனா அப்பா.. ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம்!

நிஜ முகத்தை காட்டிய மீனா அப்பா.. ஷாக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மீனா பெயரில் அவர் வீடு வாங்கிய விஷயம் அனைவருக்கும் ஷாக்கை தந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வீட்டை வாங்கிய மீனாவின் அப்பா தனது நிஜ முகத்தை காட்ட தொடங்கி விட்டார். இன்றைய எபிசோடுக்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி குடும்பம் அடுத்த பிரச்சனையில் மாட்டிக் கொண்டது நன்றாகவே தெரிகிறது. ஒருமுறை கடை கட்டி அதை திறப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து கடைசியில் ஒருவழியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சூப்பர் மார்க்கெட்டை திறந்தனர். இந்நிலையில் இப்போது மூர்த்தியின் அம்மா லட்சுமி அம்மா, மூர்த்தியின் கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள், வேற வீட்டுக்கு போனால் எல்லாமே நல்லதா நடக்கும் என்கிறார். அவரின் பேச்சை கேட்டு வீட்டை விற்க எல்லாரும் சம்மதம் சொல்கின்றனர். வேற இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி மொத்தமாக அங்கு சென்று விடலாம் என பிளான் செய்கின்றனர்.

  அவளின் நன்மைக்காக தான் இந்த முடிவை எடுத்தேன்.. அப்பாவுடன் இருக்கும் வனிதாவின் 2வது மகள்!

  இதற்கிடையில் மீனாவின் அப்பா, மூர்த்தியின் பூர்வீக வீட்டை வாங்குகிறார். மீனா பெயரில் அவர் வீடு வாங்கிய விஷயம் அனைவருக்கும் ஷாக்கை தந்தது. ஆனால் மீனாவின் அப்பா, எல்லா சொத்துக்களையும் மீனாவின் பெயரில் தான் வாங்குவோம் என கூறி பேச்சை மாற்றி விட்டார். இப்போது மூர்த்தியின் பூர்வீக வீட்டின் ஓனர் மீனா தான். இப்படி இருக்கையில் வீட்டை வாங்கிய ஜனார்த்தனன் இப்போது அவரின் நிஜ முகத்தை காட்டத் தொடங்கி விட்டார்.

  கோபி - ராதிகா கல்யாணம்.. பாக்கியலட்சுமியில் பரபரப்பு ட்விஸ்ட்!

  இதுக்குறித்த புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோவில் ஜனார்த்தனன் திடீரென்று மூர்த்தி  வீட்டு வந்து மேலே கூரையை  சரி செய்ய வேண்டும் என கூறுகிறார். பின்பு அவர் அழைத்து வந்த ஆட்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர். இப்படி வேலை நடக்க போகிறது என முன்பே சொல்லவில்லை என ஜீவா கேள்வி கேட்கிறார். இதனால் மீனாவின் முகம் மாறுகிறது. அடுத்த கொஞ்ச நேரத்தில் வேலைக்கு வந்தவர்கள் எச்சில் துப்பி வீட்டை  அசிங்கம் செய்கிறார்கள்.

  ' isDesktop="true" id="810046" youtubeid="5yuhDBcJZDM" category="television">

  இதனால் தனத்துக்கு கோபம் வருகிறது. இந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக வெடித்து பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என தெரிகிறது. அதே போல் வீட்டை வாங்கிய மீனா அப்பாவின் நிஜ முகமும் வெளியில் தெரிய தொடங்கி இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv