• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யாரு குழந்தை ஒஸ்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாய் பிரிய இதுவா காரணம்?

யாரு குழந்தை ஒஸ்தி? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இரண்டாய் பிரிய இதுவா காரணம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்க, திரும்பவும் குழந்தைகளால் சண்டை வெடிக்கிறது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யார் குழந்தை ஒஸ்தி? என்ற போட்டியிலேயே குடும்பத்தில் சண்டை முட்டுகிறது. இது எங்க போய் முடிய போகுதோன்னு தெரியல.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில மாதங்களாக கதையோட்டம் மொத்தமாக கண்ணன் ஐஸ்வர்யாவை நோக்கியே நகர்ந்து விட்டது. அண்ணன்களின் வாக்கே தெய்வ வாக்கு என வாழ்ந்து வந்த கண்ணன் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு மாறிவிட்டான். எல்லாம் காதல் படுத்தும்பாடுதான். இந்த காதல் திருமணத்தால் லட்சுமி அம்மா இறந்து போக அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மூர்த்தி , கண்ணன் மீது கோபப்பட்டு அவனை விலக்கி வைக்கிறார். இந்த விரிசலை பெரிதுப்படுத்த கஸ்தூரி அத்தாச்சி கண்ணன் - ஐஸ்வர்யாவை மூர்த்தி வீட்டுக்கு எதிரே குடி வைக்கிறார். ஆனால் கண்ணன் எதிர் வீட்டுக்கு வந்த பின்பு இங்கு நடப்பதோ வேறு. கொஞ்சம் கொஞ்சமாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் குடும்பத்துடன் நெருக்கம் ஆகிறார்கள்.

    இந்த நேரத்தில் தான் தனத்திற்கு பிரசவ வலி வர அந்த நேரம் கண்ணன் சரியான நேரத்திற்கு உதவ, சீரியலில் சுவாரசியம் கூடியது. இந்நிலையில் கடந்த 2 வாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டைக்கு மேல் சண்டை. காரணம், தனத்தின் குழந்தை மீது தான் மொத்த கவனமும் இருப்பதாக கயலை மறந்து விட்டதாக மீனா அடிக்கடி கோபித்து கொள்கிறார். இன்றைய எபிசோடிலும் அதுதான் நடக்கிறது.

    நேற்றைய தினம், மீனாவுக்கு தனத்தின் அம்மாவுக்கு சண்டை வந்தது. ஆனால் அதை பற்றி தனம் மூர்த்தியிடமோ, ஜீவா, கதிரிடமோ மூச்சு கூட விடவில்லை. வீட்டில் ஒரு சண்டை நடந்ததை கூட யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை. இதை முல்லை , மீனாவிடம் கூறி தனத்தை பற்றி பெருமையாக பேசினார். அதனைத் தொடர்ந்து மீனா, ஜீவாவிடம் நடந்ததை பற்றி கூறினார். ஆனால் தனத்தை இவர் திட்டியது பற்றி சொல்லவில்லை. இந்த பக்கம் முல்லை வீட்டில் நடந்த பிரச்சனை பற்றி கதிரிடம் மொத்தமாக ஒப்பிக்கிறார்.

    மறுநாள் காலை வீட்டில் விஷேசம் களைக்கட்ட தொடங்கியது. தனம் குழந்தையை தொட்டிலில் போடும் நாள். மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருக்க, திரும்பவும் குழந்தைகளால் சண்டை வெடிக்கிறது. தனத்தின் குழந்தையை பழைய தொட்டிலில் போட மாட்டேன் என்று நக்கலாக பேசுகிறார் தனத்தின் அம்மா. உடனே மீனாவுக்கு கோபம் வர, ஜீவாவிடம் கயல் பாப்பாவை மட்டும் ஏன் பழைய தொட்டிலில் படுக்க வைத்தீர்கள் என கேள்வி கேட்கிறார். இப்படியே மாறி மாறி எந்த குழந்தை ஒஸ்தி என்ற வாதத்திலே வீட்டில் சண்டை வெடிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: