பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சமீபத்தில் தனது குடும்பத்துடன் திருப்பதி தரிசனத்திற்கு சென்றார். அப்போது திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கியமான விஷயத்தை தனது யூடியூப் வீடியோவில் ஷேர் செய்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை முடங்கிய சமயம் யூடியூப் பக்கம் வந்த பிரபலங்கள் ஏராளம். அதில் ஒருவர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவும். இவரின் நிஜப்பெயர் ஹேமா ராஜ் குமார். இதற்கு முன்பு ஹேமா பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத புகழ் இவவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கிடைத்தது. இந்த சீரியலை மீனாவுக்காகவே பார்க்கும் கூட்டமும் தனியாக உள்ளது. இந்த ரோலில் ஹேமாவை தவிர ரசிகர்கள் வேறு ஒருவரை விரும்ப மாட்டார்கள் என தெரிந்து கொண்ட இயக்குனர், ஹேமாவின் பிரசவ நாளில் அவருக்கு லீவு கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார். 3 மாத ஓய்வுக்கு பிறகு மீண்டும் மீனா சீரியலில் என்ட்ரி கொடுத்தார்.
அதுமட்டுமில்லை மீனாவின் யூடியூப் சேனலையும் அதில் பகிரப்படும் வீடியோக்களையும் ரசிகர்கள் பெருமளவில் ரசித்து பார்க்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஹேமா, தனது குடும்பத்துடன் திருப்பதி தரிசனத்திற்கு சென்று இருந்தார். கணவர், அப்பா, தம்பி, தங்கை என ஒட்டுமொத்த குடும்பமும் மீனாவுடன் இந்த திருப்பதி தரிசனத்திற்கு சென்று இருந்தனர்.
இதையும் படிங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஆட்டி வைக்கும் ஐஸ்வர்யா!
வீட்டில் இருந்து வீடியோ எடுக்க தொடங்கிய மீனா, கீழ் திருப்பதி சென்றது, மேல் திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு சாமி தரிசனத்திற்கு சென்று வந்தது என அனைத்தையும் அந்த வீடியோவில் அப்டேட் செய்தார். இவர் சென்ற அதே நாளில் சந்திரபாபு நாயுடுவும் சாமி தரிசனத்திற்கு வந்ததையும் ஹேமா குறிப்பிட்டு இருந்தார். இத்தனை தகவலுடன் அவர் மற்றொரு முக்கியமான ரகசியத்தையும் திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஹேமா கூறியிருந்தார்.
அது என்னவென்றால், பெரும்பாலும் திருப்பதி செல்பவர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு அருகில் இருக்கும் ஃபால்ஸ்களில் குளித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். ஆனால் திருப்பதியில் சுற்றி பார்க்க ஏகப்பட்ட குட்டி குட்டி வழிப்பாட்டு தளங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று தான் பெருமாள் பாதம். திருப்பதி செல்பவர்கள் நேரம் இருந்தால் கட்டாயம் இங்கு சென்று வரும்படி மீனா பயனுள்ள இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இதுவரைக்கும் பலமுறை மீனா திருப்பதி சென்று இருக்கிறாராம். ஆனால் அவருக்கே இதுப்போன்ற இடம் இருப்பது தெரியாதாம். அவரைப்போன்று தெரியாதவர்களுக்கு கட்டாயம் இந்த பதிவு உதவும் என்கிறார் மீனா என்கிற ஹேமா ராஜ்குமார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pandian Stores, TV Serial, Vijay tv