ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பல கஷ்டங்களுக்கு பிறகு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு.. சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

பல கஷ்டங்களுக்கு பிறகு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு.. சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பல கஷ்டங்களுக்கு பிறகு சொந்தமாக வீட்டு கட்டும் தங்களது கனவு நிறைவேறி இருப்பதாக அந்த வீடியோவில் ஹேமா தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சொந்தமாக வீடு கட்டுகிறார். இதுக் குறித்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவி சீரியல்களில் ஃபேமிலி ஆடியன்ஸை மிகவும் கவர்ந்த சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது . இதே டைமிங்கில் மற்ற சேன்ல்களில் புது புது சீரியல்கள் ஒளிப்பரப்பாகி வந்தாலும் டிஆர்பியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த சீரியலின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஹேமா ராஜ்குமார். மயிலாடுதுறையை சேர்ந்த ஹேமா ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

    bigg boss Azeem : மீண்டும் மீண்டும் கேஸில் சிக்கும் அசீம்.. கமல் காட்ட போவது ரெட் கார்டா? குறும்படமா?

    ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். வாய்ப்பு கிடைக்காத ஆரம்ப காலத்தில் ஆங்கராகவும் பணியாற்றி இருக்கிறார் ஹேமா. பின்பு தான் அவருக்கு சீரியல் வாய்ப்பு வர அதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் மீனாவை நெகட்டிவாக காட்டினர். ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.இன்னும் பார்த்து வருகின்றனர். யூடியூப்பில் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதன் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வரும் ஹேமா, தனது பர்சனல் லைஃப் பற்றி அதிகம் பகிர்வார். தற்போது சென்னையில் கணவர் குடும்பத்துடன் வசித்து வரும் ஹேமாவுக்கு 2 வயதில் மகன் இருக்கிறார்.

    ' isDesktop="true" id="826316" youtubeid="r2_T3pnAUS4" category="television">

    சமீபத்தில் தான் இவர் சொந்தமாக கார் வாங்கினார். அதையும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகளாக வாடகை வீட்டில் இருந்த ஹேமா தற்போது சொந்தமாக வீடு கட்டி வருகிறார். கூடிய விரைவில் அந்த வீட்டுக்கு ஷிப்ட் ஆகவுள்ளார். பல கஷ்டங்களுக்கு பிறகு சொந்தமாக வீடு கட்டும் தங்களது கனவு நிறைவேறி இருப்பதாக அந்த வீடியோவில் ஹேமா தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லை அந்த கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் புது வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டியுள்ளார். ரசிகர்கள் பலரும் ஹேமாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv