கோபத்திலும் சரி குணத்திலும் சரி மீனா அண்ணி வேற லெவல்.. கண்ணனுக்காக யார்கிட்ட போய் நிக்குறாங்க பாருங்க!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

மனசு கேட்காத மீனா, உடனே செல்வது அவங்க அப்பாவ தேடித்தான்.

 • Share this:
  கண்ணன் - ஐஸ்வர்யாவுக்காக குட்டி அண்ணி மீனாவின் செயல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கோபத்திலும் சரி குணத்திலும் சரி மீனாவை மிஞ்ச முடியாத என்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள்.


  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் வந்தாலும் அண்ணன் தம்பிகள் ஒருவரையொருவர் எந்த இடத்திலும் விட்டு கொடுப்பதில்லை. மூர்த்தியின் 3 தம்பிகளான கதிர், ஜீவா, கண்ணன் மூவரும் அப்படி தான். ஆனால் கடைக்குட்டி தம்பி கண்ணன், உணர்ச்சிவசப்பட்டு எடுத்த கல்யாண முடிவு மொத்த குடும்பத்தையும் புயல் அடித்தது போல் ஆக்கி விட்டது. ஆனால் வீட்டுக்கு மருமகளாக வந்திருக்கும் தனம், முல்லை, மீனா மூவருமே அந்த குடும்பத்தின் மீது காட்டும் அக்கறையும் கண்டிப்பும் தான் மேலும் ஆச்சரியத்தைத் தருகிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீடு இல்லாமல் ரோட்டில் நிற்பதை அறிந்த முல்லை முதலில் தனது அப்பா மூலம் அவர்களுக்கு உதவுகிறாள்.மகளுக்காக கண்ணன் - ஐஸ்வர்யாவை அழைத்து வந்து தங்க இடம் கொடுக்கிறார் முல்லையின் அப்பா.

  ஆனால் அதற்குள் அந்த விஷயம் பிரசாந்துக்கு தெரிந்து போக, கஸ்தூரி அத்தையை அழைத்து வந்து சண்டை போட்டு பெரிய பிரச்சனை செய்கிறான் பிரசாந்த். போதாத குறைக்கு கஸ்தூரி அத்தை ஐஸ்வர்யாவை அடிக்க, கண்ணனுக்கும் பிரசாந்துக்கும் பிரச்சனை வருகிறது. இதனால் கண்ணன் மீண்டும் ஐஸ்வர்யாவை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான். இந்த விஷயம் முல்லைக்கு தெரிய வர, அவர் தனம் மற்றும் மீனாவிடம் நடந்ததை விவரிக்கிறார்.  மனசு கேட்காத மீனா, உடனே செல்வது அவங்க அப்பாவ தேடித்தான். அவரிடம் போய் கண்ணனுக்காக உதவி கேட்கிறார். அவர்களை தங்க வைக்க ஒரு வீடு தரும்படியும் , இது யாருக்கும் தெரிய வேண்டாம் அப்படினும் அப்பாவிடம் கெஞ்சுகிறார். கண்டிப்பாக மகளின் ஆசைக்காக மீனாவின் அப்பா அதற்கு சம்மதம் கூறுவார் அதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் மீனாவின் இந்த பாசம் வியக்க வைக்கிறது. கோபம் வந்தால் ராட்சசியாக கத்தும் மீனா குணத்தில் தங்கம் என்கின்றனர் ரசிகர்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூன்று மருமகள்களும் அந்த குடும்பத்தின் சொத்து தான். கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியே துரத்தினாலும் மாறி மாறி அவனுக்கு உதவி செய்கிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: