தனத்தின் அம்மா பேச்சை கேட்டு மீனா மறைத்த உண்மை.. தெரிந்ததும் கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்தோட அம்மா மீனாவின் கையை பிடித்து சொல்ல வேண்டாம் என்கிறார். மீனா அழுது துடிக்கிறார்.

 • Share this:
  பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மிகப்பெரிய சோகமாக லட்சுமி அம்மா தவறிவிட்டார்.புரமோவிலே ரசிகர்களை அழ வைத்த இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்படுகின்றன.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் மூர்த்தியின் அம்மாவான லட்சுமி அம்மாவின் மறைவு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் ரசிகர்கள் மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் பிரபலம். கூட்டு குடும்பமாக வாழும் மூர்த்தியின் குடும்பம் அவரின் அம்மா லட்சுமி இவர்களின் அன்றாட வாழ்வை தினம் தினம் டிவிகளில் பார்க்கும் ரசிகர்கள் அவர்களை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து சீரியலில் மூழ்கிவிடுகின்றனர். இதனால் தான் லட்சுமி அம்மாவின் மரணம் கூட அவர்களை அழ வைத்து விடுகிறது. புரமோவை பார்த்தவர்கள் இது உண்மையாக இருக்க கூடாது, கண்ணனின் கனவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் இது உண்மை தான். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகின்றன.

  காலை 4 மணிக்கெல்லாம் கண்ணன், திருச்சி செல்ல தயார் ஆகிறான். லைட் வெளிச்சத்தால் கண் முழிக்கும் ஐஸ்வர்யா கண்ணனுக்கு குட் மார்னிக் சொல்கிறாள். (இதுவரை ஐஸ்வர்யாக நடித்தவர் மாற்றப்பட்டார். இன்றிலிருந்து ஈரமான ரோஜாவே அகிலா ஐஸ்வர்யா ரோலில் நடிக்கிறார்). கண்ணன் நைட் எல்லாம் தூக்கம் வரவில்லை என்று ஐஸ்வர்யாவிடம் புலம்ப, ஐஸ்வர்யா தான் நன்றாக தூங்கியதாக கூறுகிறார். பின்பு கண்ணனை திருச்சிக்கு வழி அனுப்ப இவரும் கூட செல்கிறார். இருவரும் காலை 5 மணிக்கு ரோட்டில் கைக்கோர்த்து கொண்டு மனம் விட்டு பேசி செல்கின்றனர். மீனாவின் அப்பா கடை வாசலில் இருவரும் நிற்க, சரியாக லாரி வந்து நிற்கிறது. கண்ணனின் ஃபோன் கடைக்குள் ஏற்கெனவே மாட்டி கொள்ள, மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யாவிடம் கண்ணன் ஞாபகம் செய்கிறான். கடைக்கு சென்றவுடனேஃபோனை எடுத்து வைக்கும்படி சொல்லிவிட்டு மதியம் வேறு தொலைபேசியில் இருந்து கூப்பிடுவதாக சொல்லி லாரியில் கிளம்புகிறான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த பக்கம் மூர்த்தியின் வீட்டில் எல்லோரும் எழுந்திருக்க, முல்லை காபி போட்டு வரிசையாக கொடுத்து வருகிறார். கண்ணன் கூறியது போலவே, மூர்த்தியின் வீட்டில் இருப்பவர்களும் தூக்கம் வரவில்லை, கெட்ட கனவு வந்ததாக கூறி புலம்புகிறார்கள். அப்போது கதிர், லட்சுமி அம்மாவை எழுப்ப ரூமூக்கு செல்கிறான். “அம்மா அம்மா” என்று கூப்பிடுகிறான், பேச்சு மூச்சு இல்லாமல் லட்சுமி அம்மா படுத்திருக்க பயத்தில் எல்லோரையும் கூப்பிடுகிறான். மூர்த்தி, ஜீவா, முல்லை, கதிர், மீனா, தனம் என மாறி மாறி அனைவரும் எழுப்ப பலனில்லை. முன்பே இதே போல் லட்சுமி அம்மாவுக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் மருத்துவமனை செல்வது போல் நிலை வந்தது. அப்படித்தான் இந்த முறையும் நடந்திருக்கும் என்ற நம்பிக்கையில் மொத்த குடும்பமும் லட்சுமி அம்மாவை எழுப்புகின்றனர். உடனே ஜீவா, ஆஸ்பத்திருக்கு அழைத்து செல்ல வண்டி கிடைக்குமா என பார்க்க விரைகிறான்.

  அப்போது தான் தனத்தின் அம்மா, லட்சுமி அம்மாவின் நெஞ்சில் காதை வைத்து கேட்கிறார். கையை பிடித்து பார்க்கிறார். அவர் இறந்துவிட்டதாக அவருக்கு சந்தேகம் வருகிறது. ஆனால் யாரிடமும் சொல்லாமல் அழுகிறார். மனசுக்குள்ளே லட்சுமி அம்மாவின் மறைவை இந்த குடும்பம் எப்படி தாங்க போகுதுன்னு கலங்குகிறார். தனத்தின் நிலைமையை நினைத்தும் அழுகிறார். இதை கவனித்த மீனா, “பெரியம்மா அத்தை இறந்துட்டாங்களான்னு” கேட்க, தனத்தோட அம்மா மீனாவின் கையை பிடித்து சொல்ல வேண்டாம் என்கிறார். மீனா அழுது துடிக்கிறார்.

  டாக்டர் வந்து பார்த்து சொன்னா நல்லது என இருவரும் நினைத்து கொண்டு அமைதியாக நிற்கிறார்கள். இதற்கிடையில் கதிரும் அம்மா இறந்துவிட்டதை உணர்ந்து ஓரமாக நின்று அழுகிறான். கடைசியில் ஜீவா, டாக்டரை அழைத்துவர, லட்சுமி அம்மாவை செக் பண்ண டாக்டர் அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்கிறார். முல்லை, ஜீவா, மூர்த்தி கதறி துடிக்கிறார்கள். பார்ப்பவர்களை இந்த காட்சி அழ வைத்து விடுகிறது. தனம் அதை நம்ப முடியாமல் பைத்தியம் போல் நடந்து கொள்கிறார். இவர்களின் நிலைமை இப்படி என்றால், ஊருக்கு சென்று இருக்கும் கண்ணனோ அதைவிட பாவம். ஃபோனும் கையில் இல்லை விஷயம் தெரிஞ்சி எப்படி குன்னக்குடி வந்து சேர்வார் என தெரியவில்லை.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: